search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகளுக்கு அடிப்படை சுகாதாரம் அவசியம்
    X

    குழந்தைகளுக்கு அடிப்படை சுகாதாரம் அவசியம்

    குழந்தைகள் சுகாதாரமாக இருக்க வேண்டும், அதேசமயம் அவர்களின் உடலில் சுய நோய்எதிர்ப்புத் திறனும் குறையக்கூடாது.
    குழந்தைகள் சுகாதாரமாக இருக்க வேண்டும், அதேசமயம் அவர்களின் உடலில் சுய நோய்எதிர்ப்புத் திறனும் குறையக்கூடாது. இதுதான் ஆரோக்கியமான வழிமுறை. அதற்கு, தினமும் காலை தூங்கி எழுந்ததும் பல் துலக்குவது, மலம், சிறுநீர் கழித்ததும் கைகளை சோப்புப் போட்டு நன்றாகக் கழுவுவது, இருவேளை குளிப்பது, சாப்பிடும் முன் நன்றாகக் கை கழுவுவது, ஆசன வாயை எப்போதும் உலர்வாக வைத்திருப்பது, கை மற்றும் கால்களில் அழுக்கு  சேராமல் பார்த்துக்கொள்வது, வாரத்துக்குக் குறைந்தபட்சம் மூன்று நாள்களாவது தலைக்குக் குளிக்க வைப்பது, வாரம் ஒருமுறை நகங்களை வெட்டிவிடுவது, விரல்களை வாயில் வைக்காமல் பார்த்துக்கொள்வது உள்ளிட்ட இந்த அடிப்படைச் சுகாதாரப் பழக்கங்களைக் (Basic Hygiene) குழந்தைகளிடம் ஏற்படுத்த வேண்டும்.

    தவிர, தரையில் விழுந்த பொருள்களை வாயில் வைப்பது, குப்பைகளில் கைவைப்பது, பென்சில் உள்ளிட்ட எழுதுபொருள்களை வாயில் வைத்துக் கடிப்பது, அடிக்கடி தலையைச் சொறிந்துகொண்டே இருப்பது, விளையாட்டுப் பொருள்களைக் குப்பை இருக்கும் இடத்தில் போட்டு எடுத்து விளையாடுவது போன்ற, ஏற்றுக்கொள்ளக்கூடாத சுகாதாரமற்ற செயல்களைக் (Not acceptable hygiene) குழந்தைகள் செய்யாதிருக்கக் கற்றுக்கொடுக்க வேண்டும்.



    அதிக வெயில் உடல் மீது படும்படியும், அடிக்கடி மண்ணில் கை வைத்தவாறு புழுதியில் விளையாடுவதையும் தவிர்க்கச் சொல்லிக் கொடுக்கலாம். மேலும், விளையாடிவிட்டு வீட்டுக்கு வந்ததும் உடனே எந்தப் பொருளையும்  எந்த நபரையும் தொடாமல் குளிக்கச் செல்லக் கண்டிப்போடு பழக்கப்படுத்தலாம்.

    இதேபோல அடிக்கடி தும்மல், அலெர்ஜி பாதிப்பு இருக்கும் குழந்தைகள் புழுதியில் விளையாடுவதை, கைவைப்பதை அறவே தவிர்க்க வேண்டும். அலெர்ஜியால் உண்டாகும் ஆஸ்துமாவால் இன்று பல குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள்; அது மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, அந்தப் பாதிப்புள்ள குழந்தைகள் விளையாடச் செல்லும்போது கையுறை, மாஸ்க் அணிந்துகொள்வதைக் கட்டாயப்படுத்தலாம்.
    Next Story
    ×