search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சிறு குழந்தைகளுக்கு தேவைப்படும் பொருட்களை எப்படி வாங்குவது
    X

    சிறு குழந்தைகளுக்கு தேவைப்படும் பொருட்களை எப்படி வாங்குவது

    குழந்தைக்கு எப்படி பொருட்களை தேர்ந்தெடுத்து வாங்குவது என்பதே ஒரு கலைதான். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    குழந்தை பிறந்தவுடன் எல்லா வீடுகளிலும் குதூகலமும் பிறந்துவிடும். அவரவர் குழந்தைகளுக்கு தேவைப்படும் என்று பல பொருட்களை வாங்கி விடுவர். இதில் பல பொருட்கள் குழந்தைக்கு பொருத்தமற்றதாக வீணாகி விடுவதும் உண்டு. குழந்தைக்கு எப்படி பொருட்களை தேர்ந்தெடுத்து வாங்குவது என்பதே ஒரு கலைதான்.

    குழந்தை துணிகள் :

    * குழந்தைக்கு வாங்கும் துணிகள் அணிவிக்க சுலபமாகவும், துவைக்க சுலபமாகவும், மென்மையாகவும், சமத்திற்கு பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும்.

    * நீண்டு கொடுக்கும் தன்மையோடும், பட்டன், லேஸ் முதலியவை இல்லாமலும், இயற்கை இழைகள் (காட்டன், லினன்) கொண்டதாகவும் இருக்க வேண்டும்.

    * கை இல்லாததாகவும், வட்டமான அகலக் கழுத்து கொண்டதாகவும், இறுக்கம் இல்லாததாகவும் குழந்தையின் ஆடைகள் இருக்க வேண்டும்.

    கேரியர்கள் குழந்தையை தூக்கிச்செல்ல :

    இளம் குழந்தையை கடைகளுக்கோ, உறவினர் வீடுகளுக்கோ, கோவிலுக்கோ, மருத்துவ பரிசோதனைக்கோ எடுத்துச் செல்லும்போது கைகளில் தூக்கிச் செல்வது கடினமாக இருக்கும். இதற்கென பிரத்யேகமாக சில பொருட்கள் கிடைக்கின்றன.

    உடலை சுற்றி போட்டுக்கொள்ளும் தூளி :

    இது நீண்ட அகலமான துணி போல் இருக்கும். இதன் முனைகளில் பக்கிள் இருக்கும். ஒரு புறம் தோள்பட்டையில் இருந்து உடலின் குறுக்கே துணியை போட்ட இடுப்பில் பக்கிளை மாட்டி விட வேண்டும். குழந்தை தூளியில் படுத்திருப்பது போல் நம் உடலோடு படுத்திருக்கும். இதை குழந்தையை இடுப்பில் தூக்கிச் செல்வது போலவும் மாற்றிக் கொள்ளலாம்.



    பேபி காரியர் :

    இது ஒரு சிறு பை போல் இருக்கும். கைகளையும், கால்களையும் வெளியே நீட்டுவதற்கான சிறு ஓட்டைகளும் இருக்கும். குழந்தையை இதில் உட்கார வைத்து உடலின் முன்புறமோ அல்லது பின்புறமோ மாட்டிக் கொள்ள வேண்டும். நான்கு மாதத்திற்கு மேலான குழந்தைகளுக்கு இது வசதியாக இருக்கும். குழந்தை இதில் உட்கார்ந்தபடி சுற்றிலும் நடப்பதை வேடிக்கை பார்த்து வரலாம். இந்த பையில் சிறிய குழந்தைகளை நம்மை பார்த்தும் சற்றே பெரிய குழந்தையை வெளியே பார்க்கும்படியும் உட்கார வைத்து அழைத்துச் செல்லலாம். இந்த காரியர்களில் சிலவற்றில் ட்ராலி போல் அடியில் சக்கரங்களும் இழுத்துச் செல்ல பிடியும் இருக்கும். இதில் குழந்தையை உட்கார வைத்து இழுத்தச் செல்லலாம்.

    குழந்தையை குளிப்பாட்ட :

    குழந்தையை குளிப்பாட்டுவது மிகவும் ஜாக்கிரதையாக செய்ய வேண்டிய ஒரு வேலை. சிறு குழந்தைகளுக்கு அழகான பாத்டப்கள் கிடைக்கின்றன. இந்த டப்கள் வசதியாகவும், தூக்கிச் செல்லக்கூடியதாகவும், பாதுகாப்பானதாகவும் இருக்க வேண்டும்.

    குழந்தையை குளிப்பாட்டிய பின் காட்டன் துணியால் ஆன மெல்லிய மென்மையான ஆடையை குழந்தையை சுற்றி வைக்கும்போது ஈரம் எல்லாம் உறியப்பட்டு விடும். இந்த ‘பாத் ரோப்கள்’ அழகிய வண்ணங்களில் கடைகளில் கிடைக்கின்றன.

    பாத் டப்பில் குழந்தை குளிக்கும்போது சில குழந்தைகள் அழும். அனால் குளிக்கும் அனுபவத்தை குழந்தை விரும்பச் செய்வது அவசியம். எனவே, குளிக்கும் நேரத்தில் பாத் டப்பில் போட்டு வைக்க பிரத்யேகமான, அழகான வாட்டர் ப்ரூஃப் பொம்மைகள் கிடைக்கின்றன. இந்த பாத் டப்களும் காற்றடித்த உபயோகித்துக் கொள்ளக்கூடியதாக கிடைக்கின்றன. குழந்தையின் அளவிற்கு ஏற்ப இதன் அளவை நாம் கூட்டி குறைத்துக் கொள்ளலாம்.

    பாட்டில் வார்மர் :

    குழந்தைகளுக்கு லேசான இளம் சூட்டில்தான் தண்ணீர், பால், கஞ்சி போன்றவற்றை கொடுக்க வேண்டும். அவ்வப்போது பாலை சூடு செய்வதோ, இரவில் எழுந்து சென்று அடுப்பை பற்ற வைத்து பாலை சூடு செய்வதோ கடினமாக இருக்கலாம். இதற்கு இந்த பாட்டில் வார்மர் உபயோகமாக இருக்கும். இது ஒரு பவுச் அல்லது நீளமான பை போல் இருக்கும். பால் பாட்டில் அல்லது பாலின் அளவிற்கு தண்ணீரை ஊற்றி சுவிட்சை ஆன் செய்ய வேண்டும்.

    இளம் சூடான அளவில் பால் இருக்கத் தேவையான அளவில் தண்ணீரை சூடு செய்து, சூடு குறையும் போதெல்லாம் தானாகவே ஆன் ஆகி செயல்படும் இந்த வார்மர். இதிலேயே இரண்டு அடுக்குகள் கொண்டதாகவும் கிடைக்கும். ஒன்று சூடாக வைத்திருக்கவும், மற்றொன்று குளிர்ச்சியாக வைக்கவும் இருக்கும். சூடாக உள்ளதை கொடுத்த பின்பு குளிர்ச்சியான பாலை இதற்கு மாற்றிக் கொள்ளலாம். இரவு நேரங்களுக்கும், பிரயாணங்களுக்கும் இது உபயோகமாக இருக்கும்.
    Next Story
    ×