search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    ஒரே ஊசியில் குழந்தைகளுக்கான தடுப்புமருந்து
    X

    ஒரே ஊசியில் குழந்தைகளுக்கான தடுப்புமருந்து

    குழந்தைகளுக்கு வழங்கும் தடுப்பு மருந்துகளை ஒரே ஊசியில் படிப்படியாக வழங்கும் தொழில் நுட்பத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
    குழந்தைகளுக்கு வழங்கும் தடுப்பு மருந்துகளை ஒரே ஊசியில் படிப்படியாக வழங்கும் தொழில் நுட்பத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

    ஒரே ஊசியில் வழங்கக்கூடிய இந்த தடுப்பு மருந்து நுண்ணிய உறைகளில் சேமிக்கப்படுகிறது. தடுப்பூசி போட்டவுடன் தொடக்க மருந்து அளவை அது வெளியிடும். பின்னர் குறிப்பிட்ட இடைவெளிகளில் அதே நோய் எதிர்ப்பை மேம்படுத்தும் மருந்துகளை படிப்படியாக வெளியிடும் வகையில் இந்த நுட்பம் அமைந்திருக்கிறது.

    சோதனை எலிகளில் நடத்தப்பட்ட இதற்கான தொடக்க ஆய்வுகளில் இந்தத் தொழில்நுட்பம் நன்கு செயல்பட்டுள்ளதாக ‘சயின்ஸ்’ இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உலக நாடுகளில் உள்ள நோயாளிகளுக்கும் இந்தத் தொழில்நுட்பம் உதவக்கூடும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

    குழந்தைப் பருவத்தில் வழங்கப்படும் தடுப்பூசிகள் ஒருவிதத்தில் குழந்தைகளை அவதிப்படுத்துவதாக அமைகின்றன. அந்தப் பருவத்தில்தான் அதிக தடுப்பூசிகள் போடப்படுகின்றன.

    இந்நிலையில், எல்லா தடுப்பு மருந்துகளையும் ஒரே தடுப்பூசியில் சேர்த்து வழங்கும் வகையில், மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிலைய விஞ்ஞானிகள் குழுவினர் புதிய வகையான நுண்ணிய அணுக்கூறு ஒன்றை வடிவமைத்துள்ளனர்.

    இந்த அணுக்கூறு, நோய் தடுப்பு மருந்துகளால் நிரப்பப்பட்டு, மூடியால் இறுக்கமாக மூடப்பட்ட காபி கோப்பைகளின் சிறிய மாதிரியைப் போலத் தோன்றுகிறது.



    இந்தச்சிறிய கோப்பைகளை நம்முடைய விருப்பத்துக்கு ஏற்றபடி மாற்றியமைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் மூலம், சரியான நேரத்தில் அந்தச் சிறு கோப்பையில் உள்ள மருந்தை வெளியிடும் வகையில் நாம் அமைத்துக் கொள்ள முடியும்.

    சோதனை எலிகளில் நடத்தப்பட்ட ஒரு பரிசோதனையில், இந்த தடுப்பூசி போடப்பட்ட பிறகு, தடுப்பூசியாக செலுத்தப்பட்ட அணுக்கூறிலுள்ள சிறிய காபி கோப்பைகளின் மாதிரிகளில் இருந்து மருந்துகள் சரியாக 9, 20 மற்றும் 41 நாட்களில் வெளியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    நூறு நாட்களுக்குப் பிறகு மருந்துகளை வெளியிடும் அணுக்கூறுகளும் வடிவமைக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

    இந்த தடுப்பூசி வழங்கும் முறை இன்னும் மனிதர்களிடம் சோதிக்கப்படவில்லை.

    “இந்தக் கண்டுபிடிப்பில் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். முதல்முறையாக, தடுப்பு மருந்துகள் தனித்தனி அணுக்கூறுகளில் நிரப்பப்பட்டு வைத்திருக்கும் ஒரு மருந்து நிலையத்தையே நம்மால் உருவாக்க முடிந்துள்ளது. இந்த அணுக்கூறுகள் ஒவ்வொன்றும் துல்லியமாக, கணிக்கக்கூடிய நேரத்தில் மருந்துகளை வெளியிடும் வகையில் நம்மால் மாற்றி அமைத்துக்கொள்ள முடியும்.

    இதனால், தடுப்பு மருந்துகள் பல ஏற்கனவே நிரப்பப்பட்டிருக்கும் நுண்ணிய அணுக்கூறை ஒரே ஊசியில் உடலுக்குள் செலுத்தி பல்வேறு தடுப்பு மருந்துகளின் நோய் தடுப்புத் திறனை குறிப்பிட்ட இடைவெளிகளில் பெற்றுக்கொள்ளலாம்” என்று மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிலையத்தின் பேராசிரியர் ராபர்ட் லாங்கர் தெரிவித்திருக்கிறார்.
    Next Story
    ×