search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகளுக்கு முதன்முதலில் கொடுக்க வேண்டிய உணவுகள்
    X

    குழந்தைகளுக்கு முதன்முதலில் கொடுக்க வேண்டிய உணவுகள்

    குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் போதே, சற்று திட உணவுகளையும் கொடுக்க ஆரம்பிக்கும் போது தாய்மார்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
    குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் போதே, சற்று திட உணவுகளையும் கொடுக்க ஆரம்பிக்கும் போது தாய்மார்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் திடமான உணவுகள் பல உள்ளன. அவை அனைத்தையுமே குழந்தைகளால் சாப்பிட முடியாது. ஆகவே குழந்தைகளுக்கு முதல் முதலில் உணவுகளைக் கொடுக்க நினைக்கும் போது, எந்த உணவுகளையெல்லாம் முதலில் கொடுக்கலாம் என்பதைப் பற்றி தாய்மார்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

    உங்கள் குழந்தை நன்கு உட்காரவோ அல்லது தவள ஆரம்பிக்கும் போது திட உணவுகளைக் கொடுக்கலாம்.

    உருளைக்கிழங்கு பிடிக்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். ஆகவே குழந்தைக்கு உருளைக்கிழங்கை கொடுக்கும் போது, அதனை நன்கு மென்மையாக மசித்து, உங்கள் விரலால் ஊட்டி விட வேண்டும்.

    பூசணிக்காயைக் கூட குழந்தைகளுக்கு கொடுக்கலாம். அதிலும் இனிப்பு பூசணிக்காயை குழந்தைக்கு கொடுத்தால், பற்கள் வளரும் போது ஏற்படும் வலியில் இருந்து சற்று நிவாரணம் கிடைக்கும்.



    நன்கு கனிந்த வாழைப்பழத்தையும் கொடுக்கலாம். இதனால் அந்த வாழைப்பழத்தில் உள்ள இனிப்பு சுவையினால் குழந்தை விரும்பி சாப்பிட ஆரம்பிக்கும்.

    குழந்தைகளுக்கு முதன் முதலில் கொடுக்க வேண்டிய உணவுப் பொருட்களில் ஒன்று தான் ஆப்பிள். இப்படி ஆப்பிளை குழந்தைக்கு கொடுத்தால், அவர்களது நோயெதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கும்.

    மீனை கூட குழந்தைக்கு கொடுக்கலாம். அதிலும் சால்மன் மீன் கொடுப்பது தான் மிகவும் சிறந்தது. குறிப்பாக பாதி துண்டு சால்மன் மீனில் ஒரு சிட்டிகை உப்பு தூவி, வாரத்திற்கு ஒரு முறை கொடுத்தால், மீனில் உள்ள ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் கிடைத்து, குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்.

    நன்கு வேக வைத்த முட்டையை குழந்தைகளுக்கு வாரம் இரண்டு முறை கொடுத்தால், குழந்தை நன்கு வலுவுடன் வளரும்.

    அவகேடோவை பாதியாக வெட்டி, அதில் உள்ள கூழ் போன்ற பகுதியை மசித்து, குழந்தைக்கு கொடுத்தால், குழந்தையின் செரிமானம் தடையின்றி நடைபெறும்.
    Next Story
    ×