search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சின்ன சின்ன வழிபாட்டு தகவல்கள்
    X

    சின்ன சின்ன வழிபாட்டு தகவல்கள்

    தேவர்களை வணங்கும்போது இரு கைகளையும் சிரசின் மீது குவித்து வணங்க வேண்டும். மேலும் சில அரிய ஆன்மிக தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
    தேவர்களை வணங்கும்போது இரு கைகளையும் சிரசின் மீது குவித்து வணங்க வேண்டும்.`இது திரயாங்க நமஸ்காரம்' எனப்படும். ‘‘தேவரடி முன்தொழுக சென்னிமிசை கை குவித்து’’என்பது சைவ நெறி.

    திருவீழிமிழலை கடைத்தெருவாகிய ஐயன்பேட்டையில் சுவாமி செட்டியாராகவும், அம்பாள் படியளந்த நாயகியாகவும் வணங்கப்படுகின்றனர். உற்சவர் கைகளில் தராசு உடனும், அம்பாள் கைகளில் அளக்க உதவும் படியைப் பிடித்தபடியும் காட்சி தருவது சிறப்பு .

    சிவமூர்த்தங்களில் உக்கிரசக்தியாக பைரவரும், வசீகரசக்தியாக பிட்சாடனரும், ஆனந்தசக்தியாக நடராஜரும், கருணாமூர்த்தியாக சோமாஸ்கந்தரும், சாந்த மூர்த்தியாக தட்சிணாமூர்த்தியும் அருள்புரிகின்றனர்.

    சிவபெருமானுக்கு ஈசானம், தத்புருசன், அகோரம், வாமதேவம், சத்யோசாதம் என்ற ஐந்து முகங்கள் உண்டு. இவை ஐந்தும் ஐந்து திசைகளை நோக்கியுள்ளது போல சில தேவாரப்பாடல் பெற்ற தலங்களும் அமைந்துள்ளன. அவற்றை தரிசிப்பதால் ஏற்படும் பலன்களை சிவாகமங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
    Next Story
    ×