search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மீனாட்சியம்மைக்கு பொங்கப்பானை
    X

    மீனாட்சியம்மைக்கு பொங்கப்பானை

    சிவன் கோவிலில் பொங்கப்பானை அடுப்பில் ஏற்றிய பிறகே பொங்கல் பானையில் பால் பொங்கிய பின் ஆச்சிகள் வீட்டில் பொங்கப்பானையை அடுப்பில் ஏற்றுவர்.
    செட்டிநாட்டில் ஆச்சிகளுக்கு எப்படி பொங்கலுக்கு முன் தங்கள் பிறந்த வீட்டில் இருந்து பொங்கப்பானை வருகிறதோ அதே போல் செட்டிநாட்டில் உள்ள நகரசிவன் கோவில்களில் உள்ள அம்பிகைக்கு அந்த அந்த ஊர் நகரத்தார்கள் சார்பில் பொங்கல் பானை கொண்டு வந்து கொடுப்பர். 

    பொங்கலுக்கு முதல் நாள் அல்லது காலையில் அந்த ஊரில் உள்ள நகரத்தார்கள் (செட்டியார்கள்/ஆச்சிகள்) ஒன்றாக கூடி ஆளூக்கு ஒரு பொருளாக (அரிசி, பருப்பு, வெல்லம், தேங்காய், காய்கறிகள் )அவற்றுடன் அம்மைக்கும் அப்பனுக்கும் பட்டாடை கொண்டுவருவர். 

    அவற்றை கோவிலில் அம்பிகை முன் வைத்து வழிபட்டு கோயிலில் உள்ள மடப்பள்ளியில் கொடுத்துவிட்டு வருவர். 

    பொங்கலன்று காலை கோயிலில் உள்ள பரிவார தேவதைகளுக்கு அம்மை(மீனாட்சி) அப்பனுக்கும் (சுந்தரேஸ்வரர்) சிறப்பாக அபிஷேகம் நடைபெற்று பின் புது வஸ்திரம் சார்த்தப்படும். தை மாதப் பிறப்பு நல்ல நேரம் பார்த்து கோயிலில் பொங்கல் இடப்படும் . 

    சிவன் கோவிலில் பொங்கப்பானை அடுப்பில் ஏற்றிய பிறகே பொங்கல் பானையில் பால் பொங்கிய பின் ஆச்சிகள் வீட்டில் பொங்கப்பானையை அடுப்பில் ஏற்றுவர். 

    இதன் பொருள் என்ன வென்றால் முதலில் அம்பிகை மீனாட்சியின் பானையில் முதலில் பால் பொங்கவேண்டும் என்று நோக்கத்தில் இவ்வாறு செய்கின்றனர். 
    காரணம் உமையவளை தங்கள் ஆத்தாவாக பாவிக்கின்றனர். அதுபோல மீனாட்சியம்மையை தங்கள் மகளாக நினைத்து பொங்கப்பானைகொண்டு குடுப்பது வழக்கம். 

    மேலும் சில நகரத்தார் ஊர்களில் அம்பிகையின் பொங்கல் பானை அடுப்பில் ஏற்றிய பிறகே பொங்கலிடும் வழக்கமும் இன்றளவும் உள்ளது.
    Next Story
    ×