search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    முக்தியும், செல்வமும் அருளும் வைகுண்ட ஏகாதசி
    X

    முக்தியும், செல்வமும் அருளும் வைகுண்ட ஏகாதசி

    ‘காயத்ரிக்கு ஈடான மந்திரம் இல்லை; தாய்க்கு சமமான தெய்வம் இல்லை; கங்கைக்கு ஈடான தீர்த்தம் இல்லை; ஏகாதசிக்கு சமமான விரதம் இல்லை’.
    விஷ்ணுவை வேண்டி வழிபடும் விரதங்களில் முதன்மையானதாக இருப்பது ‘ஏகாதசி விரதம்’. இந்த விரதத்தை கடைப்பிடிப்பது ‘அஸ்வமேத யாகம்’ செய்த பலனைக் கொடுக்கும் என்கிறது புராணங்கள். 

    ‘காயத்ரிக்கு ஈடான மந்திரம் இல்லை; தாய்க்கு சமமான தெய்வம் இல்லை; கங்கைக்கு ஈடான தீர்த்தம் இல்லை; ஏகாதசிக்கு சமமான விரதம் இல்லை’ என்று இந்த விரதத்தின் மகிமைப் பற்றி அக்னி புராணம் எடுத்துரைக்கிறது. 

    இந்த விரதத்தின் சிறப்பு பற்றி சிவபெருமானே, பார்வதி தேவியிடம் எடுத்துக் கூறியுள்ளார் என்பது புராணங்கள் கூறும் தகவல். மாதம் இரு ஏகாதசி என்று 24 ஏகாதசிகள் உள்ளன. ஒவ்வொன்றுக்கும் ஒரு கதை இருக்கிறது.

    இவற்றில் மார்கழி வளர்பிறை தினமான நாளைய தினம் (வெள்ளிக்கிழமை) வரும் ஏகாதசியான, ‘வைகுண்ட ஏகாதசி’ மிகவும் சிறப்பு வாய்ந்தது. வைகுண்ட ஏகாதசியை ‘மோட்ச ஏகாதசி’ கீதா ஏகாதசி என்றும் அழைப்பார்கள். அதாவது நமக்கு முக்தி தந்து மோட்சத்தை அருளும் ஏகாதசி என்று பொருள்.

    பெருமாளுக்கு உகந்த பண்டிகையான வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நாளைய தினம் அனைத்து பெருமாள் ஆலயங்களிலும் சொர்க்க வாசல் எனப்படும் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறும். பரமபத வாசல் வழியாக சென்றால் முக்தி கிடைப்பதோடு இம்மை வாழ்வுக்கு தேவையான அனைத்து செல்வங்களும் கிடைக்கும்.

    வைகுந்தத்தில் வாசம் செய்யும் பெருமாள் வைகுண்ட ஏகாதசி தினத்தில் விரதமிருந்து வழிபடும் பக்தர்களுக்கு மூன்று கோடி தேவர்கள் சூழ வந்து அருளும் தினம் வைகுண்ட ஏகாதசி எனப்படுகிறது.

    திருமாலின் சக்தி ரூபத்தை ஏகாதசி திதியில் மார்கழி மாதத்தில் வணங்கினால் வைகுந்த பதவிக்கு நிகரான அளவில்லா செல்வம், புகழ், கல்வி, ஞானம், இன்பம் பெற்று வாழ்வார் என்பது உண்மை.

    இவ்விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு எனப்படும் பரமபதவாசல் திறப்பு வைபவம் அனைத்து பெருமாள் தலங்களிலும் நாளை அதிகாலை நடைபெறவுள்ளது. 



    ஏகாதசி அன்று விரதம் மேற்கொள்வதை அனைத்து சாஸ்திரங்களும் வலியுறுத்துகின்றன. அனைத்து ஏகாதசிகளிலும் விரதம் இருந்து வழிபடுவோர் பிறவி துயர் நீங்கி வைகுண்ட பதவியை அடைவர் என்பது நம்பிக்கை. வருடம் முழுவதும் ஏகாதசி விரதத்தை கடைபிடிக்க இயலாதவர்கள், மார்கழி மாதம் வரும் வைகுண்ட ஏகாதசியில் மட்டுமாவது விரதம் இருப்பது சிறப்பான பலனை தரும். 

    இரவு முழுவதும் கண்விழித்து புராண நூல்களை படிப்பதும், விஷ்ணு சகஸ்ரநாமம், விஷ்ணு பாடல்கள் மற்றும் ரங்கநாதர் ஸ்துதி முதலியவற்றை ஓதுவதுமாக பொழுதுபோக்க வேண்டும்.

    ஏகாதசி என்பது திதிகளில் பதினொன்றாவதாக வருவது. அந்த நாளில் நாமும் நம்முடைய கர்மேந்தி ரியங்கள் ஐந்து, ஞானேந்தி ரியங்கள் ஐந்து, மனம் ஒன்று- ஆக இந்தப் பதினொன்றையும் பகவானோடு ஒன்றச் செய்ய வேண்டும்.

    இந்த ஒன்றுதல், அவனோடு என்றுமே ஒன்றுவதாக உருப்பெறும் என்பது தான் ஏகாதசி விரதத்தின் உட்பொருள். அந்த உட்பொருளின் வெளிவடிவாக நடைபெறுவதுதான் பரமபத வாசல் திறப்பும், வைகுண்ட ஏகாதசித் திருநாளும்!

    சரணாகதி மனோபாவத்தோடு, ஏகாதசி விரதத்தை மேற்கொள்ள வேண்டும். அப்படி ஒன்றினால் பிறவிப்பிணியை அறுத்து நிச்சயம் நமக்கு பெருமாள் முக்தி தந்து சொர்க்கத்துக்கு வழிகாட்டுவார். எனவே நாளை சொர்க்கவாசலை கடக்கும் வாய்ப்பை நழுவ விடாதீர்கள்.

    முக்கோடி ஏகாதசி

    ஸ்ரீமந் நாராயணன் அசுர சம்ஹாரத்திற்கு வேண்டி பூலோகத்திற்கு மூன்று கோடி தேவர்களுடன் எழுந்தருளினார். இதனால், வைகுண்ட ஏகாதசிக்கு முக்கோடி ஏகாதசி என்று பெயர் ஏற்பட்டது.



    ஏகாதசி அன்று செய்யக்கூடாதவை

    ஏகாதசி திதி நாட்களில் தாய், தந்தைக்கு நினைவு நாள் (சிரார்த்தம்) வந்தால் அன்று நடத்தாமல் மறு நாள் துவாதசி அன்று நடத்த வேண்டும். ஏகாதசி அன்று உண்ணாமல் இருப்பவர்களை கேலி செய்து அவர்களை உண்ண வைப்பவன் நரகத்திலும் மிக கீழான நரகத்திற்கு செல்வான். ஏகாதசி அன்று துளசி இலைகளை பறிக்கக் கூடாது. தேவையானதை முதல்நாளே பறித்து வைத்து விட வேண்டும்.

    வீட்டில் வழிபடுவது எப்படி?

    காலையில் எழுந்து நீராடிவிட்டு, வீட்டில் திருமாலின் படத்தின் முன் அமர்ந்து, விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லி வணங்க வேண்டும். பின், ஏகாதசியன்று விரதமிருந்து, துவாதசியில் பாரணை செய்ய வேண்டும்.

    ஏகாதசி அன்று செய்யக்கூடாதவை

    ஏகாதசி திதி நாட்களில் தாய், தந்தைக்கு நினைவு நாள் (சிரார்த்தம்) வந்தால் அன்று நடத்தாமல் மறு நாள் துவாதசி அன்று நடத்த வேண்டும். ஏகாதசி அன்று உண்ணாமல் இருப்பவர்களை கேலி செய்து அவர்களை உண்ண வைப்பவன் நரகத்திலும் மிக கீழான நரகத்திற்கு செல்வான்.

    ஏகாதசி அன்று துளசி இலைகளை பறிக்கக் கூடாது. தேவையானதை முதல்நாளே பறித்து வைத்து விட வேண்டும்.

    பரமபதம்

    வைகுண்ட ஏகாதசியன்று இரவு கண்விழித்து பரமபதம் விளையாடுவது ஒரு முக்கியமான சம்பிரதாயமாகக் கருதப்படுகிறது. 

    பாவம் செய்தவர்கள் வாழ்வில் கீழே இறங்குவர் என்பதையும், புண்ணியம் செய்தால் சொர்க்கமாகிய திருமாலின் வைகுண்டத்தை எளிதாக அடையலாம் என்பதையும் இதன்மூலம் தெரிந்து கொள்ளலாம்.
    Next Story
    ×