search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பகவத்கீதையின் பொருள்
    X

    பகவத்கீதையின் பொருள்

    எந்தச் செயலைச் செய்தாலும் அதன் பலனை இறைவனுக்கே அர்ப்பணித்து விட வேண்டும் என்பதே கீதையின் பொருள்.
    பகவத்கீதையை ஐந்தாம் வேதம் என்று கூறுவார்கள். அவ்வளவு வேதாந்த தத்துவங்கள் அதில் பொதிந்திருக்கின்றன. ‘பகவத்’ என்றால் ‘இறைவன்’ என்று பொருள். ‘கீதா’ என்றால் ‘நல்ல உபதேசம்’ என்று அர்த்தம். ‘கீதா’ என்ற சொல்லை, வேகமாகச் சொல்லும் போது ‘தாகீ’ என்று மாறும். ‘தாகீ’ என்றால் ‘தியாகம்’ என்று பொருள்படும். 

    வாழ்வில் வரும் அனைத்து சுக துக்கங்களையும் இறைவனிடம் ஒப்படைத்து விட வேண்டும் என்பது இதன் பொருள். ‘துறவு கொள்ளுங்கள், எல்லாவற்றையும் விட்டுவிடுங்கள்’ என்பதும் ‘கீதா’ என்ற சொல்லின் ஆழமான பொருட்களாகும். அர்ச்சுனன் தன் உறவினர்களை எதிர்த்து போர்புரியத் தயங்கியபோது, ‘தர்மத்தைக் காக்க அவர்களை அழித்தாலும் தவறில்லை. 

    அதற்குரிய பலாபலன்கள் என்னையே சேரும்’ என்று ஸ்ரீகிருஷ்ணர் சொன்னார். எனவே, எந்தச் செயலைச் செய்தாலும் அதன் பலனை இறைவனுக்கே அர்ப்பணித்து விட வேண்டும் என்பதே கீதையின் பொருள். 

    Next Story
    ×