search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருப்பதியில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா செப்டம்பர் 23-ந்தேதி தொடங்குகிறது
    X

    திருப்பதியில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா செப்டம்பர் 23-ந்தேதி தொடங்குகிறது

    ரூ.8 கோடி செலவில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா செப்டம்பர் 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    ரூ.8 கோடி செலவில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது. இந்த விழா செப்டம்பர் மாதம் 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா அடுத்த மாதம் (செப்டம்பர்) 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி அக்டோபர் மாதம் 1-ந்தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது. அதையொட்டி பிரம்மோற்சவ விழா முன்னேற்பாடுகள் குறித்து தேவஸ்தான மற்றும் அரசு அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் திருமலையில் உள்ள அன்னமயபவனில் நடந்தது. கூட்டத்தில் திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் அனில் குமார் சிங்கால் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    வருடாந்திர பிரம்மோற்சவ விழாவையொட்டி செப்டம்பர் மாதம் 23-ந்தேதி கொடியேற்றம் நடக்கிறது. அன்று ஆந்திர மாநில அரசு சார்பில், முதல்-மந்திரி சந்திரபாபுநாயுடு பட்டு வஸ்திரம் சமர்ப்பணம் செய்கிறார். முதல்-மந்திரி சந்திரபாபுநாயுடு வருகையையொட்டி திருமலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது. பிரம்மோற்சவ விழாவின்போது மூலவர் வெங்கடாஜலபதியை பக்தர்கள் தரிசனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்படும்.

    கோவிலின் நான்கு மாட வீதிகளில் அமர்ந்து வாகன ஊர்வலத்தை கண்டு களிக்கும் பக்தர்களுக்கு குடிநீர், மோர், டீ, காபி ஆகியவை வினியோகம் செய்யப்படுகிறது. இந்தப் பிரம்மோற்சவ விழா ரூ.8 கோடி செலவில் நடக்கிறது. தேவஸ்தானத்தின் அனைத்துத்துறை அதிகாரிகள் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். 27-ந்தேதி கருடசேவை நடக்கிறது. அன்று அதிக பக்தர்கள் திருமலையில் கூடுவார்கள். எனவே மலைப்பாதைகளில் மோட்டார்சைக்கிள்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×