search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    முருகப்பெருமானின் பல்வேறு பெயர்கள்
    X

    முருகப்பெருமானின் பல்வேறு பெயர்கள்

    மலைகளில் குடி கொண்டுள்ள முருகப்பெருமான்கு பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறார். முருகன் வீற்றிருக்கும் ஸ்தங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
    மலைகளில் குடி கொண்டுள்ள குமரனுக்குச் சிலம்பன் என்றோரு பெயர் உள்ளது. முருகனுக்கு விசாகன் என்றும் ஒரு பெயர் உண்டு. விசாகன் என்றால் மயிலில் சஞ்சரிப்பவன் என்பது பொருளாகும்.

    முருகனின் கோழிக் கொடிக்கும் குக்குடம் என்றோர் பெயருண்டு. இந்தக் கோழியே வைகறைப் பொழுதில் ஒங்கார மந்திரத்தை ஒளி வடிவில் உணர்த்துவது ஆகும். பொருள், வீரியம், புகழ், திரு, ஞானம், வைராக்கியம் என்கிற ஆறு குணங்களே ஆறுமுகம்.

    வட அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஜெர்மன், இலங்கை, பாரிஸ், ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் முதலிய நாடுகளில் முருகன் கோவில்கள் உள்ளன.

    முருகப் பெருமானுக்காகக் கட்டப்பட்ட முதல் திருக்கோவில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒற்றைக் கண்ணூர்த் திருக்கோவில் ஆகும். முதலாம் ஆதித்த சோழன் இதனைக் கட்டினான்.

    சிறுவாபு-ரி சென்னை-நெல்லூர் வழியில் பொன் னேரிக்கு 20 கி.மீ. தூரமுள்ளது. புதுமனை புகுவோர் முன்னர் இவ்வூரில் முருகனுக்குப் பால் அபிஷேகம் செய்தால் வீட்டில் சகல சவுபாக்கியங்களும் முருகனால் உண்டாகும்.

    முருகனுக்கு உருவமில்லாத கோவில் விருத்தா சலத்தில் உள்ளது. பெயர் கொளஞ்சியப்பர்.

    கோபுரத்து இளையனார் என்கிற முருகன் சந்நிதி திருவண்ணாமலையில் உள்ளது.

    முருகன் வீற்றிருக்கும் மிக நீண்ட மலை திருத்தணி பள்ளிப்பட்டு ரோட்டில் அமைந்துள்ள நெடியமலை ஆகும்.

    திண்டுக்கல்லில் இருந்து ஏழு மைல் தூரத்தில் உள்ள சின்னாளப்பட்டியில் நான்கு தலையுள்ள முருகன் ஆலயம் அமைந்துள்ளது.
    Next Story
    ×