search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திட்டக்குடி அருகே வேதநாராயண பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
    X

    திட்டக்குடி அருகே வேதநாராயண பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

    திட்டக்குடி அருகே வேதநாராயண பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    திட்டக்குடி அருகே உள்ள தொளாரில் வேதவல்லி சமேத வேதநாராயண பெருமாள் கோவில் உள்ளது. பழமைவாய்ந்த இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த கோவில் நிர்வாகத்தினர் மற்றும் அப்பகுதி மக்கள் முடிவு செய்தனர். அதன்படி கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வர்ணங்கள் பூசப்பட்டு கோவில் தற்போது புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது. இதையடுத்து கோவில் கும்பாபிஷேவிழா கடந்த 3-ந்தேதி விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்கியது. பின்னர் யாகசாலை பூஜை, வாஸ்து சாந்தி, பூர்ணாகுதி நடைபெற்றது.

    தொடர்ந்து யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனித நீர் அடங்கிய கலசங்கள் மேள, தாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு கோவில் கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மூலவருக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்று, சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் தொளார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்த னர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    இதேபோல் கிள்ளை அருகே சி.முட்லூர் ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாசபெருமாள் கோவிலிலும் நேற்று முன்தினம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி கோவில் அருகே அமைக்கப்பட்டிருந்த யாகசாலையில் கடந்த 3-ந்தேதி விழா தொடங்கி யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. பின்னர் கடம்புறப்பட்டு சென்று கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் சி.முட்லூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×