search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நாளை தொடங்குகிறது
    X

    முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நாளை தொடங்குகிறது

    கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் அக்கிள் நாயுடு தெரு எதிரில் உள்ள முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நாளை தொடங்குகிறது.
    கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் அக்கிள் நாயுடு தெரு எதிரில் முத்தாலம்மன் கோவில் உள்ளது. திருப்பாதிரிப்புலியூர்-திருவந்திபுரம் சாலையில் இருந்த இந்த கோவிலால் போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்படுவதாகவும், அதனை இடித்துவிட்டு அருகில் புதிதாக கோவிலை கட்டுமாறும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது. அதன்படி முத்தாலம்மன் கோவில் இடிக்கப்பட்டு, அருகிலேயே ரூ.70 லட்சம் செலவில் புதிய கோவில் கட்டும் பணியை கோவில் நிர்வாகத்தினர் தொடங்கினர்.

    இந்த பணிகள் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. தற்போது பல வர்ணங்கள் பூசப்பட்டு கோவில் புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா நடத்த நிர்வாகத்தினர் முடிவு செய்தனர்.

    அதன்படி கோவில் கும்பாபிஷேக விழா நாளை(செவ்வாய்க்கிழமை) காலை தொடங்குகிறது. இதையொட்டி அன்றைய தினம் காலை 8 மணி அளவில் மங்கள இசையும், 9 மணிக்கு விக்னேஷ்வர மற்றும் கலச பூஜையும், மாலையில் சிறப்பு ஹோமங்கள் மற்றும் தீபாராதனை நடக்கிறது. நாளை மறுநாள்(புதன்கிழமை) காலை 7 மணி அளவில் கோ பூஜை, தன பூஜை, நவகிரக கலச பூஜை, ஹோமங்கள், தீபாராதனை, 29-ந் தேதி சிறப்பு பூஜையும் நடைபெற உள்ளது.

    30-ந் தேதி(வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு யாக மண்டப பூஜை, வேதிகா கும்ப பூஜை, சுகன்யா பூஜை, தம்பதி பூஜை, 9 மணிக்கு மகா தீபாராதனை, 9.30 மணிக்கு யாகசாலையில் இருந்து புனிதநீர் அடங்கிய கலசங்கள் புறப்பாடு ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    9.55 மணி அளவில் கோபுர கலசங்கள் மீது புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. பின்னர் மூலவரான முத்தாலம்மன் மற்றும் விநாயகர், முருகன், வராஹி ஆகிய சாமி சிலைகளுக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்படுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×