search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பெருமாள் சயன தலங்கள்
    X

    பெருமாள் சயன தலங்கள்

    இந்த சரீரம் நன்றாக இயங்கிக்கொண்டிருக்கும்போதே புண்ணிய ஷேத்ரங்களையும், பெருமாள் சயன தலங்களையும் தரிசித்துவிடவேண்டும்.
    மனிதர்களாக பிறந்தவர்கள் அனைவரும் தங்கள் வாழ்நாளில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களையும் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 வைஷ்ணவ திவ்ய தேசங்களையும் அவசியம் தரிசிக்கவேண்டும்.

     அனைத்து தலங்களையும் தரிசிக்க முடியாவிட்டாலும் தங்களால் எத்தனை முடியுமோ அத்தனை தலங்களை தரிசிக்கவேண்டும். வயதாகி முதுமை வந்தால் தான் இது போல திருத்தலங்களை தரிசிக்கவேண்டும் என்கிற கருத்து பலரிடம் உள்ளது. அது தவறு. தவறு. தவறுக்கும் தவறான தவறு. இந்த சரீரம் நன்றாக இயங்கிக்கொண்டிருக்கும்போதே புண்ணிய ஷேத்ரங்களையும் திருத்தலங்களையும் தரிசித்துவிடவேண்டும்.

    ஸ்ரீரங்கம் - வீர சயனம்
    மகாபலிபுரம் - தல சயனம்
    திருமயம் - போக சயனம்
    திருக்கோஷ்டியூர் - பால சயனம்
    கும்பகோணம் - உத்தான சயனம்
    திருவனந்தபுரம் - அனந்த சயனம்
    திருமோகூர் - பிரார்த்தனா சயனம்
    திருப்புல்லாணி - தர்ப்ப சயனம்
    திருச்சித்திரக்கூடம் - போக சயனம்
    திருநீர்மலை - மாணிக்க சயனம்
    ஸ்ரீவில்லிபுத்தூர் - வடபத்திர சயனம்

    திருமாலின் சயனங்கள் 10 வகைப்படும். அவைகள்:

    1. ஜல சயனம்
    2. தல சயனம்
    3. புஜங்க சயனம் (சேஷசயனம்)
    4. உத்தியோக சயனம்
    5. வீர சயனம்
    6. போக சயனம்
    7. தர்ப்ப சயனம்
    8. பத்ர சயனம் (பத்ர எனில் ஆலமரத்து இலை)
    9. மாணிக்க சயனம்
    10. உத்தான சயனம்
    Next Story
    ×