search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அட்சய திருதியை நாளில் நடந்த அற்புத நிகழ்வுகள்
    X

    அட்சய திருதியை நாளில் நடந்த அற்புத நிகழ்வுகள்

    ஆதிகாலம் தொட்டு அட்சய திருதியை நன்னாளில் பல அற்புத நிகழ்வுகளும், தெய்வங்களின் பிறப்பும், ஏராளமான அவதார நிகழ்வுகளும் நடைபெற்று உள்ளன.
    ஆதிகாலம் தொட்டு அட்சய திருதியை நன்னாளில் பல அற்புத நிகழ்வுகளும், தெய்வங்களின் பிறப்பும், ஏராளமான அவதார நிகழ்வுகளும் நடைபெற்று உள்ளன. இதன் காரணமாகவே அட்சய திருதியை அதிக முக்கியத்துவமும், பெருமையும் மிகுந்த நன்னாளாக கருதப்படுகிறது.

    அட்சய திருதியை அதிசய நிகழ்வுகள் :

    * அட்சய திருதியை அன்று தான் கிருதயுகம் பிறந்துள்ளது.

    * கங்கை சொர்க்கத்தில் இருந்து பூமியில் தவழ்ந்து ஓடிய தினம் அட்சய திருதியை நாளில் தான்.

    * மகா விஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராமர் அவதரித்தது அட்சய திருதியை அன்று தான்.

    * ஐஸ்வர்ய லட்சுமி, தானியலட்சுமி அவதாரங்கள் நிகழ்ந்த நன்னாள் ஓர் அட்சய திருதியை தான்.

    * அன்னங்களை அள்ளி வழங்கும் அன்னபூரணி அவதரித்தது அட்சய திருதியை அன்று தான்.

    * திருமால் மார்பில் இருப்பதற்கு மகாலட்சுமி வேண்டி வரம் பெற்ற நன்னாள் அட்சய திருதியை.

    * குபேரன் நிதி கலசங்களை பெற்றது அட்சய திருதியை நாளில் தான்.



    அட்சய திருதியை அற்புதங்கள் :

    சிவபெருமான் பிட்சாடனராக வந்து அன்னபூரணியிடம் யாசகம் பெற்ற நன்னாள் அட்சய திருதியை.

    வனவாசத்தின் போது பஞ்ச பாண்டவர்களுக்கு அட்சய பாத்திரம் கிடைத்ததும் அட்சய திருதியை நாளில் தான்.

    சாகம்பரி தேவி காய்கறிகளையும், மூலிகைகளையும் உருவாக்கினார் என புராணம் கூறுகிறது. அட்சய திருதியை அன்று தான் தேவி காய்கறி, மூலிகைகளை உருவாக்கினார்.

    கிருஷ்ணர் குசேலனிடம் அவல் வாங்கி உண்டு அக்‌ஷயம் என கூற, குசேலனின் ஏழ்மை தீர்ந்த செல்வந்தனாய் மாற்றம் அடைந்தது அட்சய திருதியை நாளில் தான். எனவே அட்சய திருதியை நாளில் வழங்கப்படும் தானங்களில் அன்னதானம் அதிஉயர்வானதாக கருதப்படுகிறது.

    அட்சய தினத்தன்று பிற மாநிலங்களில் செய்யப்படும் முக்கிய பணிகள் :

    வட மாநிலங்களில் அட்சய திருதியை அன்று திருமணம் நிகழ்த்துவது புனிதமாக கருதப்படுகிறது. அதனால் அன்றைய தினம் அதிகபட்சமாக திருமணங்கள் நடைபெறுகிறது.

    ஒரிசாவில் வீடு கட்ட, கிணறு தோண்ட நன்னாளாக அட்சய திருதியை கருதப்படுகிறது.

    அரியானா, பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஜாட் இனத்தவர்கள் அட்சய திருதியை தினத்தன்று மண்வெட்டி எடுத்து கொண்டு வயலுக்கு செல்வார்கள்.

    பீகார், உத்திரபிரதேசத்தில் அட்சய திருதியை அன்று நிலத்தில் நெல் விதைப்பை நிகழ்த்தி விவசாய பணியை தொடங்குவர்.

    மேற்குவங்காளத்தில் அட்சய திருதியை அன்று விநாயகரையும், லட்சுமியையும் வணங்கி புது கணக்குகளை தொடங்குவர்.
    Next Story
    ×