search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    செல்வம் பெருக சுப்ரமணிய மங்களாஷ்டகம்
    X

    செல்வம் பெருக சுப்ரமணிய மங்களாஷ்டகம்

    சுப்ரமணியருக்கு உகந்த இந்தத் துதியை தினமும் அல்லது முருகனுக்கு உகந்த நாட்களில் பாராயணம் செய்து வந்தால், செல்வ வளமும், உடல் நலமும் மேலோங்கும்.
    சிவயோஸ்தனுஜாயாஸ்து ச்ரித மந்தாரசாகினே
    சிகிவர்யதுரங்காய ஸுப்ரமண்யாய மங்களம்
    பக்தாபீஷ்ட ப்ரதாயாஸ்து பவரோக விநாசினே
    ராஜராஜாதி வந்த்யாய ரணதீராய மங்களம்

    - சுப்ரமணிய மங்களாஷ்டகம்

    பொருள்: பார்வதி பரமேஸ்வரனின் புத்திரரே, அண்டியவர்களுக்கு கற்பக விருட்சம் போன்று கேட்ட வரங்களைத் தருபவரே, சிறந்ததும், அழகானதுமான மயிலை வாகனமாகக் கொண்டவரே, சுப்ரமணிய பெருமானே நமஸ்காரம். பக்தர்கள் விரும்பியதை அளிப்பவரே, ஜனன, மரண ரோகத்தைப் போக்குபவரே, குபேரனால் வணங்கப்பட்டவரே, அரக்கரை வதைக்கும் யுத்தத்தில் பிரியமும், தைரியமும் கொண்டவரே, முருகப் பெருமானே நமஸ்காரம்.
    Next Story
    ×