search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    முன் ஜென்ம பாவவினைகள் கரைந்தோடும் சனிப்பிரதோஷ விரதம்
    X

    முன் ஜென்ம பாவவினைகள் கரைந்தோடும் சனிப்பிரதோஷ விரதம்

    எந்த பிரதோஷத்தையும் விட சனிபிரதோஷத்திற்க்கு அதிக சக்தி உண்டு என்று கூறப்படுகிறது. சிவாலயத்தில் பிரதோஷ தரிசனம் தொடர்ந்து செய்துவந்தால் முன் ஜென்ம பாவ வினைகள் கரைந்தோடும்.
    பிரதோஷம் என்பது மாதம் இரண்டு முறை ஆலயங்களில் அனுஷ்டிக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் வளர்பிறை திரயோதசி, மற்றும் தேய்பிறை திரயோதசி தினங்களில் மாலை 4.30 மணி முதல் ஆறு மணிவரை பிரதோஷ காலம் என்று அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த திரயோதசி திதி கார்த்திகை மாதத்தில் சனிக்கிழமைகளில் வந்தால் சனிமஹாப்பிரதோஷம் என்று சொல்லப்படுகிறது. அன்றுதான் சிவன் ஆலகால விஷத்தை உண்டதாக புராணங்கள் கூறுகின்றன.

    எனவே சனிக்கிழமைகளில் பிரதோஷம் என்பது சனிப்பிரதோஷம் என்று சிறப்பாக வழிபாடு செய்யப்படுகின்றது. சனிப்பிரதோஷமும் ஆலயங்களில் விமரிசையாக வழிபாடு நடத்தப்படுகின்றது. எந்த பிரதோஷத்தையும் விட சனிபிரதோஷத்திற்க்கு அதிக சக்தி உண்டு என்று கூறப்படுகிறது. இதுவரை பிரதோஷத்தில் பங்குக்கொள்ளாத நபர்கள் இன்று பங்குக்கொள்ளலாம்.



    சனிப்பிரதோஷமான இன்று அதிகாலையில் எழுந்து நீராடி நித்தியக் கடன்களை முடிக்கவேண்டும். சிவாலயம் சென்று வழிபடவேண்டும். இன்று முழுவதும் உணவின்றி உபவாசம் இருக்கவேண்டும். திருமுறைகளை ஓத வேண்டும். பிரதோஷநேரம் மாலை 4.30 முதல் 6.00 மணி வரை. இந்நேரத்தில் சிவாலயம்சென்று உள்ளம் உருகி ஐந்தெழுத்தை (சிவாயநம) ஓதி வழிபட வேண்டும்.

    ஒரு சிலர் வீட்டில் நடராஜர்க்கு அபிஷேகம் செய்வார்கள் அவர்களும் இன்று செய்யலாம். வீட்டில் பூஜை செய்யமுடியாதவர்கள் அருகில் இருக்கும் சிவலாயம் சென்று பிரதோஷத்திற்க்கு தேவையான அபிஷேகப்பொருட்களை வாங்கிக்கொடுக்கலாம்.

    நம்மால் பிரதோஷ பூஜைக்கு செல்லமுடியவில்லை என்ற நிலை ஏற்படும்பொழுது மாலை வேளையில் சிவனை நினைத்துக்கொண்டு இருக்கலாம். இடைவிடாத சிவன் நினைப்பு உங்களை உயர்த்தும்.

    சிவன் கோவிலை சுற்றி வலம் வரலாம். கிரிவலம் போல் சுற்றி வரலாம். சந்திரன் பாதிக்கப்பட்டு இருக்கும் ஜாதகர்கள் மாலை வேளையில் இன்று சிவன் கோவிலை சுற்றி வாருங்கள் நல்ல மனநிலை உங்களுக்கு உருவாகும்.
    Next Story
    ×