search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா 22-ந்தேதி தொடங்குகிறது
    X

    புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா 22-ந்தேதி தொடங்குகிறது

    மேல ஆசாரிபள்ளம் புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா(125-வது குடும்ப விழா) வருகிற 22-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம்(அக்டோபர்) 1-ந்தேதி வரை நடக்கிறது.
    நாகர்கோவில் மேல ஆசாரிபள்ளம் புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா(125-வது குடும்ப விழா) வருகிற 22-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம்(அக்டோபர்) 1-ந் தேதி வரை நடக்கிறது.

    22-ந் தேதி காலை 6 மணிக்கு நற்கருணை வழிபாடும், மாலை 6.15 மணிக்கு ஜெபமாலையும், திருக்கொடியேற்றமும் நடக்கிறது. இதற்கு கோட்டார் குருகுல முதல்வர் மைக்கேல் ஏஞ்சல் தலைமை தாங்குகிறார். குருசடி பங்குத்தந்தை பிரான்சிஸ் போர்ஜியோ மறையுரை நிகழ்த்துகிறார்.

    23-ந் தேதி மாலை 6.15 மணிக்கு ஜெபமாலை, நற்கருணை வழிபாடு நடக்கிறது. இதற்கு கோட்டார் மறைமாவட்ட இணை பொருளாளர் ரவி காட்சன் கென்னடி தலைமை தாங்குகிறார். பார்வதிபுரம் பங்குத்தந்தை ஆன்றனி பென்சிகர் மறையுரை நிகழ்த்துகிறார்.

    24-ந் தேதி மாலை 6 மணிக்கு நற்கருணை பவனி ஆரம்பம் நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கு பாம்பன் விளை அசிசி ஆஸ்ரமம் அதிபர் மரியராஜ் இருதயம் தலைமை தாங்குகிறார். பள்ளவிளை பங்குத்தந்தை பிரான்சிஸ் மறையுரை நிகழ்த்துகிறார். பவனியை ஆண்ட்ரூஸ் வழி நடத்துகிறார்.

    29-ந் தேதி 8-ம் திருவிழா நடக்கிறது. அன்று காலை 6 மணிக்கு நற்கருணை வழிபாடும், திருமுழுக்கும் நடக்கிறது. இரவு 8 மணிக்கு சமபந்தி விருந்து நடக்கிறது.

    30-ந் தேதி காலை 7.30 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி நடக்கிறது. இதற்கு ஆயர் நசரேன் தலைமை தாங்கி மறையுரை நிகழ்த்துகிறார். இரவு அலங்கார தேர்ப்பவனி நடக்கிறது.

    1-ந் தேதி 10-ம்திருவிழா நடக்கிறது. அன்று காலை 5 மணிக்கு நற்கருணை வழிபாடும், 8 மணிக்கு திருவிழா சிறப்பு கூட்டுத்திருப்பலியும் நடக்கிறது. காலை 10.30 மணிக்கு அலங்கார தேர்ப்பவனி நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை சேவியர் ராஜா மற்றும் பங்கு மக்கள், பங்கு அருட்பணி பேரவையினர், நிதிக்குழுவினர், அருட்சகோதரிகள் செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×