search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    ஹோன்டா CB300R தாய்லாந்தில் அறிமுகம் செய்யப்பட்டது
    X

    ஹோன்டா CB300R தாய்லாந்தில் அறிமுகம் செய்யப்பட்டது

    ஹோன்டா நிறுவனத்தின் CB300R மோட்டார்சைக்கிள் தாய்லாந்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக இந்த மாடல் இத்தாலியில் அறிமுகம் செய்யப்பட்டது.
    புதுடெல்லி:

    ஹோன்டா நிறுவனத்தின் 2018 CB300R மாடல் தாய்லாந்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக இத்தாலியில் நடைபெற்ற 2017 EICMA விழாவில் CB300R அறிமுகம் செய்யப்பட்டது.
     
    ஹோன்டா ஃபிளாக்ஷிப் மாடல்களில் மட்டும் வழங்கப்படும் பல்வேறு பிரீமியம் அம்சங்கள் புதிய CB300R மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது. இதன் வடிவமைப்பு CB1000R மாடலை தழுவியும், இதன் ஃபிரேம் அழுத்தப்பட்ட ஸ்டீல் மற்றும் டியூபுளர் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.

    மேலும் இதன் சேசிஸ் அதிக உறுதியானதாக இருக்கும் படி விசேஷ ஸ்டீல் மற்றும் சவுகரியமாக பயன்படுத்த ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் இன்ஸ்ட்ரூமென்ட் பேனலில் எள்சிடி டிஸ்ப்ளே, எல்இடி லைட்டிங், டெயில்லைட் மற்றும் இன்டிகேட்டர்கள் வழங்கப்பட்டுள்ளது. 



    இன்ஸ்ட்ரூமென்ட் பேனலில் வேகம், இன்ஜின் ஆர்.பி.எம்., எரிபொருள் இருப்பு அளவு, கியர் பொசிஷன் இன்டிகேட்டர் வழங்கப்பட்டுள்ளது. CB300R மாடலில் 41 மில்லிமீட்டர் தலைகீழான முன்பக்க ஃபோர்க், மாற்றக்கூடிய பின்புற மோனோஷாக் வழங்கப்பட்டுள்ளது. 

    பிரேக்கிங் அம்சங்களை பொருத்த வரை ரேடியல்-மவுண்ட் 4-பிஸ்டன் பிரேக் கேலிப்பர், ஹப்லெஸ் முன்பக்க டிஸ்க் மற்றும் டூயல் சேனல் ABS உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. புதிய CB300R மாடலில் லிக்விட்-கூல்டு, 286சிசி, DoHC, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. 

    இந்த இன்ஜின் 30.9 பி.ஹெச்.பி. பவர் 8500 ஆர்.பி.எம். மற்றும் 27.5 என்.எம். டார்கியூ 7500 ஆர்.பி.எம். மற்றும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. பத்து லிட்டர் பெட்ரோல் டேன்க் கொண்டிருக்கும் ஹோன்டா CB300R ஒட்டுமொத்த எடை 143 கிலோ ஆகும். ஒருமுறை டேன்க் நிரப்பினால் அதிகபட்சம் 300க்கும் அதிகமான கிலோமீட்டர் தொலைவு செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×