தாமிரபரணி புஷ்கர விழா இன்று நிறைவு: தீப ஆரத்தி எடுத்து பக்தர்கள் வழிபாடு

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி புஷ்கர விழா இன்று (செவ்வாய்க்கிழமை) நிறைவு பெறுகிறது. நேற்று தீப ஆரத்தி எடுத்து பக்தர்கள் வழிபாடு நடத்தினார்கள்.
முறப்பநாடு கைலாசநாத சுவாமி கோவில் படித்துறையில் புனித நீராட திரண்ட பக்தர்களை படத்தில் காணலாம்.
முறப்பநாடு கைலாசநாத சுவாமி கோவில் படித்துறையில் புனித நீராட திரண்ட பக்தர்களை படத்தில் காணலாம்.
Published on

தினமும் காலையில் தாமிரபரணி ஆற்றில் புனித நீராடும் நிகழ்ச்சியும், மாலையில் ஆரத்தி எடுத்து வழிபடும் நிகழ்ச்சியும் நடந்து வருகிறது. இந்த புஷ்கர விழாவில் வெளி மாவட்டம் மட்டும் அல்லாமல், ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் கலந்துகொண்டு புனித நீராடி வருகிறார்கள்.

குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில் படித்துறையில் தாமிரபரணிக்கு தீப ஆரத்தி நடந்தபோது எடுத்தபடம்.

அதேபோல் பாபநாசம், அம்பை, கல்லிடைக்குறிச்சி, சேரன்மாதேவி, திருப்புடைமருதூர், கோடகநல்லூர், அத்தாளநல்லூர் உள்ளிட்ட படித்துறைகளிலும் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.

சேரன்மாதேவி பக்தவச்சலபெருமாள் கோவில் வியாச தீர்த்தக்கட்டத்தில் நேற்று மாலை தாமிரபரணி அன்னைக்கு தீப ஆரத்தி நடந்தபோது எடுத்தபடம்.

நெல்லை சந்திப்பு குறுக்குத்துறை முருகன் கோவிலில் நேற்று காலை 6 மணி முதல் 8 மணி வரை யாகசாலை பூஜை, மாலை 5.30 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனத்தின் புஷ்பாஞ்சலி, 6 மணிக்கு தாமிரபரணி ஆற்றில் ஆரத்தி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com