தென்ஆப்பிரிக்காவில் ஜிம்பாப்வே தூதரகம் மூடல்

ஜிம்பாப்வே நாட்டின் தூதரகத்தில் பணியாற்றி வரும் 2 ஊழியர்களுக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து தென்ஆப்பிரிக்காவில் அந்நாட்டின் தூதரகம் மூடப்பட்டது.
தூதரகம்
தூதரகம்
Published on

ஜோகன்னஸ்பர்க்:

ஆப்பிரிக்க நாடுகளில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட முதல் நாடாக தென் ஆப்பிரிக்கா உள்ளது. அந்த நாட்டில் இதுவரை 1,01,590 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செயப்பட்டுள்ளது. அங்கு இந்த கொடிய வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.

இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவின் தலைநகர் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள ஜிம்பாப்வே நாட்டின் தூதரகத்தில் பணியாற்றி வரும் 2 ஊழியர்களுக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த தூதரகம் மூடப்பட்டது.

இத்தகவலை ஜிம்பாப்வே நாட்டின் தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை மந்திரி மோனிகா முத்ஸ்வாங்வா உறுதிபடுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் தென் ஆப்பிரிக்காவில் உள்ள நமது தூதரகத்தில் 2 ஊழியர்களுக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து தூதரகம் மூடப்பட்டது என்கிற சோகமான செய்தியை தேசம் உங்களுக்கு தெரிவிக்கிறது. தூதரகம் இப்போது மீண்டும் திறக்கப்படும் என்பது குறித்து முறையான அறிவிப்பு வெளியிடும். அதுவரை தூதரக பணிகள் அனைத்தும் இணையம் வழியாக நடைபெறும் இவ்வாறு அவர் கூறினார். 

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com