சவுதி அரேபியாவின் சர்வதேச விமான நிலையம் மீது ஹவுதிக்கள் ஏவுகணை தாக்குதல்

சவுதி அரேபியாவின் வான்வெளியைப் பயன்படுத்த வேண்டாம் என அனைத்து சர்வதேச சிவில் விமான நிறுவனங்களையும் எச்சரிக்கிறோம்.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on

ஏமனில் செயல்படும் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள், சவூதி அரேபியாவின் அப்ஹா சர்வதேச விமான நிலையம் மீது ஏவுகணை மற்றும் டிரோன்கள் மூலம் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.

சனா தாக்குதல்

முன்னதாக ஏமனில் ஹவுதி கட்டுப்பாட்டில் உள்ள சனா நகரில் அமைந்துள்ள சனா விமான நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

அங்கு ஈரானிய விமானம் ஒன்று தரையிறங்கவிருந்த நிலையில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலால் அந்த விமானம் திசையை மாற்றி ஹுதைதா விமான நிலையத்தில் தரையிங்கியது.

ஈரான் விமானம் தரையிறங்குவதை தடுக்க தங்கள் படைகளே தாக்கியதாக ஏமன் அரசு தெரிவித்துள்ளது. ஆனால் இந்த தாக்குதல் சவூதி அரேபிய ராணுவத்தால் நடத்தப்பட்டது என ஹவுதி அமைப்பு குற்றம்சாட்டியுள்ளதால் குழப்பம் ஏற்பட்டது.

பழிக்குப் பழி

இந்த சூழலில் சனா விமான நிலைய தாக்குதலுக்கு பழிக்கு பழி என கூறி, சவுதி அரேபியாவின் தென்பகுதியில் உள்ள அப்ஹா சர்வதேச விமான நிலையத்தை குறிவைத்து தாக்கியதாக ஹவுதிக்கள் தெரிவித்துள்ளனர்.

மீறல்

கடந்த 2022ம் ஆண்டு ஐநா முன்னெடுத்த போர்நிறுத்த உடன்படிக்கைக்கு பிறகு முதல் முறையாக ஹவுதிக்கள், சவுதி அரேபியா மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

எச்சரிக்கை

ஹூதி அமைப்பின் ராணுவ செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் யஹ்யா சாரி இத்தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ளார்.

அவர் டெலிகிராமில் வெளியிட்ட வீடியோ செய்தியில், "சனா சர்வதேச விமான நிலையத்தின் மீதான முற்றுகை நீக்கப்படும் வரை, சவுதி அரேபியாவின் வான்வெளியைப் பயன்படுத்த வேண்டாம் என அனைத்து சர்வதேச சிவில் விமான நிறுவனங்களையும் எச்சரிக்கிறோம்." என தெரிவித்துள்ளார்.

இதனிடையே அப்ஹா சர்வதேச விமான நிலைய தாக்குதலில் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹவுதிக்களால் ஏவப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகளை தங்களின் வான் பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாக இடைமறித்து அழித்ததாக சவுதி தரப்பு தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com