

மத்திய கிழக்கு முழுவதும் ஈரானும், அமெரிக்காவும் பரஸ்பர தாக்குதல்களை தொடர்ந்து வரும்நிலையில், இஸ்லாமிய குடியரசுடனான அமைதி ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
துருக்கியின் அங்காராவில் நடைபெற்ற நோட்டோ மாநாட்டில் பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப்,
“ஈரானுடனான போர் நிறுத்தம் முடிந்துவிட்டது என்று நான் நினைக்கிறேன்; இந்த அயோக்கியர்களுடன் நான் இனிமேலும் உறவாட விரும்பவில்லை,” என்று கூறி, ஈரானுடனான போர் நிறுத்தம் முடிந்துவிட்டதாக அறிவித்தார்.
இருநாடுகளுக்கிடையே பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து சமீபத்தில் 60 நாட்களுக்கான தற்காலிக அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டது. ஆனால் ஹார்மூஸ் பஞ்சாயத்தால் தற்போது அந்த ஒப்பந்தம் மீறப்பட்டு இருநாடுகளும் மீண்டும் தாக்குதலை தொடர்ந்துள்ளன.
அமெரிக்காவின் தொடர் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, பஹ்ரைன் மற்றும் குவைத் முழுவதும் உள்ள அமெரிக்க இராணுவ இலக்குகள் மீது தாக்குதல்களை நடத்தியதாக இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது . பஹ்ரைனிலும் அமெரிக்க படைகள் தங்கியுள்ள விமானத் தளத்தை குறிவைத்ததாக ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல்களைத் தொடர்ந்து ஈரான்மீது மீண்டும் எண்ணெய் விற்பனைக்கு தடை விதித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.