

புரிந்துணர்வு முறிந்ததை அடுத்து ஈரான் மீது அமெரிக்கா தொடர் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது.
இன்று அதிகாலையில் ஈரானில் உள்ள பாலங்கள் மற்றும் போக்குவரத்து வழித்தடங்களை குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.
பிரதானமாக தெற்கு ஈரானில் நடந்த இந்த பாலங்கள் மேக்கேதான் தாக்குதலில் குறைந்தது 7 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இன்றைய தாக்குதலில் ஈரானிய ராணுவப் போக்குவரத்திற்கு முக்கியமான கடலோரப் பாலங்களையும் உள்கட்டமைப்புகளையும் அழித்ததாகவும் இந்தத் தாக்குதல்கள் மூலம் ஈரானிய கடற்படை நடவடிக்கைகளை முழுமையாக தடுப்பதே தங்களின் திட்டம் என்றும் அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இன்றைய தாக்குதல்களுடன் சேர்த்து, கடந்த சில நாட்களில் ஈரானில் அமெரிக்கா நடத்திய தாக்குதல் பொதுமக்கள் 35 பேர் கொல்லப்பட்டதாகவும், 300 பேர் வரை காயமடைந்ததாகவும் ஈரானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு பதிலடியாக மத்திய கிழக்கில் பஹ்ரைன், குவைத், கத்தார் ஆகிய நாடுகள் மீது ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரானிய ஏவுகணைகளை இடைமறித்ததாக கத்தார் உறுதிப்படுத்தியுள்ளது.
நேற்று, ஈரானின் தென்மேற்கில் குசெஸ்தான் மாகாணத்தில் அமைந்துள்ள அஹ்வாஸூ பகுதியில் செயல்பட்டு வரும் புற்றுநோய் சிறப்பு மையமான ஷாஹித் பகாயி மருத்துவமனைக்கு அருகே அமெரிக்கா வான்வழித் தாக்குதலை நடத்தியது.
இதையடுத்து அங்கு சிகிச்சை பெற்று வந்த குழந்தைகள் உட்பட 211 உள்நோயாளிகள் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
ஈரானின் குசெஸ்தான் மாகாணத்தில் உள்ள புற்றுநோய் சிறப்பு மையமான ஷாஹித் பகாயி மருத்துவமனைக்கு அருகே, அமெரிக்க படைகள் வான்வழித் தாக்குதல்கள் நடத்தியது.
இந்த தாக்குதலை அடுத்து மருத்துவமனையில் இருந்த இருநூறுக்கும் மேற்பட்ட நோயாளிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
அமெரிக்கா தனது தாக்குதல்களை நிறுத்தவில்லை என்றால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அனைத்து உள்கட்டமைப்புகளில் அழிப்போம் என ஈரான் ராணுவ பிரிவு செய்தி தொடர்பாளர் கர்னல் எப்ராஹிம் ஜோல்பஹாரி எச்சரித்துள்ளார்.
தனது இறையாண்மை மீறப்படுவதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்றும், பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகள் பெரும் விலையைக் கொடுக்க நேரிடும் என்றும் ஈரான் வெளியுறவு அமைச்சகம் எச்சரித்துள்ளது.