கிண்டி சிறுவர் பூங்கா தரம் உயர்த்தப்படும் - தமிழக அரசு அறிவிப்பு

கிண்டி சிறுவர் பூங்கா உலக நாடுகளில் உள்ள பூங்காவுக்கு இணையான பூங்காவாக தரம் உயர்த்தப்படும் என்று அமைச்சர்கள் அறிவித்தனர்.
கிண்டி சிறுவர் பூங்கா
கிண்டி சிறுவர் பூங்கா
Published on

சென்னை:

தமிழக வனத்துறை, வன உயிரின வார விழாவை கடந்த 2-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை நடத்தியது. இதில் பள்ளி கல்லூரி மாணவிகள் உள்பட 25 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். இதன் நிறைவு விழா கிண்டியில் உள்ள சிறுவர் பூங்காவில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், டி.ஜெயக்குமார் கலந்துகொண்டு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கினார்கள்.

ஒலி-ஒளி அரங்கம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி கூடம் ஆகியவற்றை துவக்கி வைத்து பேசினார்கள்.

கிண்டி சிறுவர் பூங்கா ‘மிகச்சிறு பூங்கா’ நிலையில் இருந்து ‘நடுநிலை பூங்கா’ நிலைக்கு மாற்றப்படும் என்றும் உலக நாடுகளில் உள்ள பூங்காவுக்கு இணையான பூங்காவாக உயர்த்தப்படும் என்றும் அமைச்சர்கள் அறிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com