திருவாடானை அருகே மில் ஊழியர் மர்ம மரணம்

திருவாடானை அருகே மில் ஊழியர் மர்மமான முறையில் இறந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாடானை அருகே மில் ஊழியர் மர்ம மரணம்
Published on

தொண்டி:

திருவாடானை அருகே உள்ள தனியார் பஞ்சுமில்லில் மத்தியபிரதேச மாநிலம், ஹோசங்க பாத் மாவட்டம், கிருபன் கிராமத்தைச்சேர்ந்த சேட்டாலால் படேல் மகன் சரேந்தர் படேல் (வயது23) மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். வழக்கம்போல வேலைக்குச் சென்றுவிட்டு இரவு அறையில் தூங்கினார்.

நேற்று காலை அவரது அறையை திறந்து பார்த்த போது மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து இவரது உறவினர் ஹேமந்த் மீனா கொடுத்த புகாரின் பேரில் திருவாடானை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com