

கரூரில் கடந்த செப்டம்பரில் நடந்த எதிர்பாராத விபத்துக்கு தவெக தலைவர் விஜய், நிகழ்வுக்கு தாமதமாக வந்ததே காரணம் என திமுக செய்தித்தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்.,
“கரூரில் நிலவிய உண்மையான சூழல் என்ன? கலவரம் வெடித்ததா அல்லது பேரிடர் ஏதேனும் ஏற்பட்டதா?அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை. மதியம் 12 மணிக்கு விஜய் உரையாற்றுவார் என நினைத்து 9 மணிக்கே மக்கள் வந்தனர்.
விஜய்யை ஒருமுறையாவது நேரில் பார்த்துவிட வேண்டும் என்பதற்காகவே அவர்கள் முன்னரே வந்து காத்துக்கிடந்தனர். உட்காரக்கூட இல்லை, கிட்டத்தட்ட 12 மணிநேரம் வெயிலிலேயே நின்றனர். 7.30 மணிக்குத்தான் விஜய் வந்தார்.
சுட்டெரிக்கும் வெயிலில் தண்ணீர், உணவு இல்லாமல் ஒருவர் நின்றால் மயங்கி விழுவார்கள் என்பது குறைந்தபட்சம் பொது அறிவும், மனிதநேயமும் உள்ளவர்களுக்கு தெரியும்.
10 மணிநேரம் தண்ணீர், உணவு இல்லாமல் விஜய் நின்றாக்கூட மயங்கிதான் விழுவார். இது முழுவதும் தாமத்தின் விளைவு. ஆனால் அவர் திமுகவை குற்றம் சாட்டுவதில்தான் இருக்கிறார்.
100 பேர் மயங்கியதில் 41 பேர் உயிரிழந்தனர். மீதமுள்ள 60 பேரை திமுக காப்பாற்றியது. விஜய் காப்பாற்றவில்லை. அதைமுதலில் அவர் புரிந்துகொள்ள வேண்டும். திமுக சம்பவ இடத்திற்கு விரைந்து பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்த்தது.
இதற்கிடையே சென்னைக்கு ஓடினாரேத்தவிர, பாதிக்கப்பட்டவர்களை சென்று ஒருமுறைக்கூட பார்க்கவில்லை. தாமதத்தின் விளைவுதான் இந்த விபத்து என்பதை அவர் முதலில் உணரவேண்டும்.” என தெரிவித்தார்.