TN Assembly Election: தொண்டர்கள் புடைசூழ வேட்புமனு தாக்கல் செய்தார் உதயநிதி ஸ்டாலின்

தேர்தல் நடத்தும் அலுவலர் சுகந்தியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
TN Assembly Election: தொண்டர்கள் புடைசூழ வேட்புமனு தாக்கல் செய்தார் உதயநிதி ஸ்டாலின்
Published on

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற ஏப்ரல் 23-ந்தேதி நடக்கிறது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 30-ந்தேதி தொடங்கியது.

வருகிற 6-ந்தேதி வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாளாகும். அன்று மதியம் 3 மணி வரை வேட்பு மனுக்கள் பெறப்படுகிறது.

இதற்காக மாநிலம் முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம் உருவாக்கப்பட்டு உள்ளது. அந்த அலுவலகங்களில் இன்று காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்பு மனுக்கள் பெறப்படுகிறது.

இந்நிலையில், திமுக சார்பில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 2வது முறையாக போட்டியிடும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தொண்டர்கள் புடைசூழ இன்று வேட்பு மனுதாக்கல் செய்தார்.

தேர்தல் நடத்தும் அலுவலர் சுகந்தியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

உதயநிதியை எதிர்த்து அதிமுக சார்பில் ஆதிராஜாராம், தவெக சார்பில் டி.செல்வம் ஆகியோர் களம் காண்கின்றனர்.

கடந்த தேர்தலில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 69,355 வாக்குகள் வித்தியாசத்தில் உதயநிதி ஸ்டாலின் வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com