

தங்கம் விலையில் தொடர் ஏற்ற, இறக்கங்கள் காணப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த 5-ம் தேதி வரை ஏறுமுகமாக இருந்த தங்கம் விலை நேற்று முன்தினம் ஒரு கிராம் 13 ஆயிரத்து 560-க்கும், ஒரு சவரன் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 480-க்கும் விற்பனை ஆனது.
தங்கம் விலை நேற்று சரிவை சந்தித்தது. கிராமுக்கு ரூ.160 குறைந்து ரூ.13 ஆயிரத்து 400-க்கும், சவரனுக்கு ரூ.1,280 சரிந்து ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்து 200-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தங்கம் விலை சரிவு
சென்னையில் இன்று காலை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 560 குறைந்து ரூ.1,06,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ. 70 குறைந்து ரூ.13,330-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.245-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், சென்னையில் இன்று மாலை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1040 குறைந்து ரூ.1,06,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.130 குறைந்து ரூ.13,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் மாற்றம் எதுவும் இல்லை.
ஒரே நாளில் தங்கம் விலை இரு முறை குறைந்துள்ளது இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.