

சென்னை:
தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியை மேற்கொள் காட்டி கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் பாஜகவால் ஒருபோதும் வளர முடியாது. பாஜக அணிந்துள்ள அதிமுக முகமூடியைக் கிழித்தெறிவதற்காகவே, நாங்கள் ‘TN Vs NDA’ எனும் பிரசாரத்தை முன்னெடுத்துள்ளோம். மக்கள் அவர்களைத் தொடர்ந்து நிராகரித்தே வருகின்றனர்.
தமிழ்நாட்டில் ஆளுங்கட்சிக்குச் சாதகமான அலை வீசி வருகிறது. மக்களின் ஆதரவுடன் நாங்கள் நம்பிக்கையுடன் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று கூறியுள்ளார்.