காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்து!

மிகச் சிறந்த மனிதர், ஜனநாயகத் தன்மை உள்ளவர்.
காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்து!
Published on

தமிழ்நாட்டின் அரசியலில் வரலாற்றிலேயே நல்ல ஒரு தொடக்கம் அமையட்டும் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது, "நமது அரசியல் நிலைப்பாடு ஏதுவாக இருந்தாலும், தமிழ்நாட்டிற்கென்று இருந்த பண்பாட்டையும், கலாசாரத்தையும் கைவிடாமல் தமிழ் மரபை உயர்த்தி பிடித்துள்ள முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு எனது இதயபூர்வமான பாராட்டுகள்.

ஏழு ஆண்டுகாலம் நாடாளுமன்ற உறுப்பினராகவும், அதற்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளராகவும் ஏறக்குறைய 10 ஆண்டுகள் திமுகவின் தலைவர், முன்னாள் முதலமைச்சர் அண்ணன் மு.க. ஸ்டாலின் அவர்களை அறிவேன். மிகச் சிறந்த மனிதர், ஜனநாயகத் தன்மை உள்ளவர்.

அண்ணன் அவர்கள் பதிவியில் இருந்தபோதும் இல்லாதபோதும் தன்மையுடனும், அன்போடும் பழகக்கூடியவர். இந்தச் சந்திப்பிற்கு முழுக்கத் தகுதியானவர்.

தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் இது ஒரு நல்ல தொடக்கமாக அமையட்டும். அரசியலில் கட்சி வேறுபாடுகளைத் தாண்டி பரஸ்பரம் மரியாதையும்,அன்பும் அவசியம் . அதுவே ஒரு நல்ல சமூகத்தை உருவாக்கும்” என்று பதிவிட்டுள்ளர்.

X

Maalai Malar
www.maalaimalar.com