

முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா தலைமையிலான திமுக அரசு, 1967-ஆம் ஆண்டு ஜூலை 18 அன்று அப்போதைய மதராஸ் மாகாணத்திற்கு 'தமிழ்நாடு' எனப் பெயர் சூட்டும் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றியது.
தமிழ்த்தாயின் ஏக்கம் தீரத் தலைமகன் பேரறிஞர் அண்ணா தமிழ்நாடு என பெயர்சூட்டிய நாள் இந்நாள் என முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
1956-ஆம் ஆண்டே மொழிவாரியாக மாநிலங்கள் பிரிந்தாலும் இந்த நிலம் Madras State என்ற பெயரிலேயே தொடர்ந்தது.
எத்தனையோ முயற்சிகள், தீர்மானங்கள், போராட்டங்கள் நிகழ்ந்தும் எதுவும் மாறவில்லை.
1967-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது கழகம். முதலமைச்சரானார் நம் அண்ணா. வரலாற்றில் பொன்னாளாக நிலைபெற வந்தது அந்நாள்!
தமிழ்த்தாயின் ஏக்கம் தீரத் தலைமகன் பேரறிஞர் அண்ணா அவர்கள் 'தமிழ்நாடு' என்ற பெயரினை அவையினில் முழங்க, ஒட்டுமொத்த மாநிலத்தின் உணர்வினையும் எதிரொலிக்கும் வகையில் உறுப்பினர்கள் எல்லாம் 'வாழ்க' என வாழ்த்தி மகிழ்ந்த இந்த நாளே தமிழ்நாடு நாள்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.