TN Assembly Election| கூட்டணி பேச்சுவார்த்தை... இ.பி.எஸ். - நயினார் இன்று மாலை சந்திப்பு

தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் வருகிற 20-ந்தேதி கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
TN Assembly Election| கூட்டணி பேச்சுவார்த்தை... இ.பி.எஸ். - நயினார் இன்று மாலை சந்திப்பு
Published on

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை இன்று மாலை பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொகுதிப் பங்கீடு இன்னும் இறுதியாகாத நிலையில் எடப்பாடி பழனிசாமியை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் நயினார் நாகேந்திரன் சந்திப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.விற்கு 27 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் வருகிற 20-ந்தேதி கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக, கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக நிர்வாகிகள் மற்றும் வியூக வகுப்பாளர்களுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று முக்கிய ஆலோசனையில் ஈடுபட உள்ளார். ஒரே தொகுதியை ஒன்றுக்கும் மேற்பட்ட கட்சிகள் மாறி மாறிக் கேட்பது குறித்து ஆலோசிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com