அ.தி.மு.க. கூட்டணியில் விரைவில் தொகுதி பங்கீடு - எடப்பாடி பழனிசாமி

சென்னை எம்ஜிஆர் நகரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.
அ.தி.மு.க. கூட்டணியில் விரைவில் தொகுதி பங்கீடு - எடப்பாடி பழனிசாமி
Published on

சென்னை:

சென்னை எம்ஜிஆர் நகரில் இன்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பிறகு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவரிடம் அ.தி.மு.க.வில் தொகுதி பங்கீடு எப்போது முடிவடையும்? தேர்தல் அறிக்கை தயாராகி விட்டதா? என்பது போன்ற கேள்விகள் கேட்கப்பட்டன.

இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை விரைவில் முழுமையாக வெளியிடப்படும். கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுடன் கலந்து பேசி தொகுதி பங்கீட்டையும் இறுதி செய்ய உள்ளோம். இதன் பிறகு யார் யாருக்கு எத்தனை தொகுதிகள் என்கிற விவரங்கள் வெளியிடப்படும் என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com