TN Assembly Election| அ.தி.மு.க. தேர்தல் வாக்குறுதி வெறும் வெத்து வேட்டு தான்- துரைமுருகன்

தேர்தல் காலத்தில் இப்படிப்பட்ட அறிவிப்புகளை செய்வது சில கட்சிகளுக்கு வாடிக்கை.
TN Assembly Election| அ.தி.மு.க. தேர்தல் வாக்குறுதி வெறும் வெத்து வேட்டு தான்- துரைமுருகன்
Published on

காட்பாடியில் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

தேர்தல் காலத்தில் இப்படிப்பட்ட அறிவிப்புகளை செய்வது சில கட்சிகளுக்கு வாடிக்கை. கனிமொழி மாநில அரசியலுக்கு வந்தால் உதயநிதிக்கு இடையூறு ஏற்படும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது பற்றி பதில் தெரியாது.

அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை வெறும் வெத்து வேட்டு. அவர்கள் ஆட்சிக்கு வரப்போவதில்லை. அதனால் இப்படியெல்லாம் தேர்தல் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார்கள். விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தொகுதி பங்கீடு இழுபறி ஏற்பட்டதால் திருமாவளவனுக்கு ஒன்னும் வருத்தம் கிடையாது. மகிழ்ச்சியாக தான் சென்றார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com