வெறுப்பை விதைத்து குளிர்காயும் பாஜக... தமிழர்கள் ஒருபோதும் RSS-யிடம் சரணடைய மாட்டார்கள் - ராகுல் பேச்சு

இந்தியா மனிதநேயம், ஒற்றுமை உணர்வால் நிறைந்த நாடு அதனை குலைப்பது தான் பாஜகவின் திட்டம்.
வெறுப்பை விதைத்து குளிர்காயும் பாஜக... தமிழர்கள் ஒருபோதும் RSS-யிடம் சரணடைய மாட்டார்கள் - ராகுல் பேச்சு
Published on

குளச்சல்:

தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்கு நாளை ஒரு நாள் மட்டுமே அவகாசம் இருப்பதால் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது ராகுல் காந்தி பேசியதாவது:-

* எப்போது நான் தமிழகம் வந்தாலும் காமராஜரை நினைவுகூர்கிறேன். அவரது கல்விப்பணிகள் மிகச்சிறப்பானது.

* எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அந்த மாநிலங்களை எல்லாம் டெல்லியில் இருந்து பாஜக ஆள்கிறது.

* தமிழர்களை சரணடைய வைக்க முடியாது என்பதால் அதிமுக மூலம் தமிழகத்தில் கால் பதிக்க பாஜக நினைக்கிறது.

* பாஜகவின் கருவி தான் அதிமுக, அதன் தலைவர்கள் பாஜகவிடம் சரணடைந்து விட்டனர்.

* மதிய உணவு திட்டம், மகளிர் நல திட்டங்கள், சமூக நலத்திட்டங்களில் தமிழ்நாடு முன்னோடியாக திகழ்கிறது.

* தமிழர்களின் அரசியல் வரலாறு என்பது சமூக நீதியை முன்னிறுத்தியது.

* தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை நாடாளுமன்றத்தில் குறைக்க பா.ஜ.க. சதி.

* திராவிட சித்தாந்தத்தை வெறுக்கிறது RSS இயக்கம். தமிழர்கள் ஒருபோதும் RSS-யிடம் சரணடைய மாட்டார்கள்.

* வெறுப்பை விதைத்து மக்களை பிளவுப்படுத்தி குளிர்காய்வது தான் பாஜக, ஆர்எஸ்எஸ்-யின் வேலை.

* இந்தியா மனிதநேயம், ஒற்றுமை உணர்வால் நிறைந்த நாடு அதனை குலைப்பது தான் பாஜகவின் திட்டம்.

* எங்களது கூட்டணி ஆட்சியில் உரிமைத் தொகை உள்ளிட்ட அனைத்து திட்டங்களும் தொடரும்.

* காலிப்பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படும், உரிமைத் தொகை ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com