ஓணம் பண்டிகை - சென்னையில் இருந்து மங்களூரு, கொல்லம், திருவனந்தபுரத்திற்கு சிறப்பு ரெயில்கள்..

இதற்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
Onam Special Trains
Published on

கேரளாவின் மிக முக்கிய பாரம்பரிய அறுவடைத் திருநாளான ஓணம் பண்டிகை இந்த ஆண்டு ஆகஸ்ட் 16-ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 28-ஆம் தேதி வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது.

ஓணம் பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைப்பதற்காக சென்னையில் இருந்து மங்களூரு, கொல்லம், திருவனந்தபுரத்திற்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது..,

மங்களூரு - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில்..

கர்நாடக மாநிலம் மங்களூருவில் இருந்து ஜூலை 13, 20, 27 மற்றும் ஆகஸ்டு 3, 10, 17, 24, 31 ஆகிய தேதிகளில் திங்கட்கிழமைதோறும் மாலை 4 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06126) மறுநாள் காலை 10.55 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடைகிறது.

மறுமார்க்கத்தில், சென்னை எழும்பூரில் இருந்து ஜூலை 14, 21, 28, ஆகஸ்டு 4, 11, 18, 25, செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் செவ்வாய்கிழமைகளில் மதியம் 2 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06125) மறுநாள் காலை 8.40 மணிக்கு மங்களூருரை சென்றடையும்.

22 பெட்டிகளை கொண்ட இந்த ரெயில் தமிழ்நாட்டில் திருப்பூர், ஈரோடு, ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் வழியாக செல்லும்.

சென்னை சென்ட்ரல் - கொல்லம் சிறப்பு ரயில்..

இதேபோல், சென்னை சென்டிரலில் இருந்து ஆகஸ்டு 12, 19, 26 மற்றும் செப்டம்பர் 2 ஆகிய தேதிகளில் புதன்கிழமைதோறும் மதியம் 3.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06119) மறுநாள் காலை 7.20 மணிக்கு கொல்லத்தை சென்றடையும்.

மறுமார்க்கத்தில், கொல்லத்தில் இருந்து ஆகஸ்டு 13, 20, 27 மற்றும் செப்டம்பர் 3 தேதிகளில் வியாழக்கிழமைதோறும் காலை 10.40 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் காலை 3.30 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும்.

இந்த சிறப்பு ரெயில், தமிழகத்தில் பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக செல்லும்.

திருவனந்தபுரம் - தாம்பரம் சிறப்பு ரயில்..

மேலும், திருவனந்தபுரத்திலிருந்து ஆகஸ்டு 12, 19, 26, செப்டம்பர் 2 ஆகிய தேதிகளில் புதன்கிழமைதோறும் மாலை 3.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06110) மறுநாள் காலை 10 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.

மறுமார்க்கத்தில், தாம்பரத்தில் இருந்து ஆகஸ்டு 13, 20, 27, செப்டம்பர் 3 ஆகிய தேதிகளில் வியாழக்கிழமைதோறும் மதியம் 2 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06109) மறுநாள் காலை 7.15 மணிக்கு திருவனந்தபுரத்தை சென்றடையும்.

22 பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு ரெயில், தமிழ்நாட்டில் செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை, கொடை ரோடு, திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு ஆகிய ரெயில் நிலையங்கள் வழியாக செல்லும்.

நாளை முன்பதிவு

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பின்படி, பயணிகள் தங்களின் டிக்கெட்டுகளை IRCTC அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்கள் மூலமாக நாளை (ஜூலை 9) காலை 8 மணி முதலே முன்பதிவு செய்து கொள்ளலாம்.

X

Maalai Malar
www.maalaimalar.com