

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. மகளிர் அணியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:-
* தி.மு.க. ஆட்சியில் மகளிருக்கான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
* ஒவ்வொரு திட்டத்தையும் பார்த்து, பார்த்து நிறைவேற்றினோம்.
* எங்கு நல்லது நடந்தாலும் நமது கட்சியினர் செய்ததாக இருக்க வேண்டும்.
* ஓட்டு போட்டவர்களும், ஓட்டு போடாதவர்களும் வேதனைப்படுகிறார்கள்.
* ஏன் இந்த ஆட்சிக்கு வாக்களித்தோம் என மக்கள் வேதனைப்படுகிறார்கள்.
* ஏற்கனவே நடந்த நிகழ்ச்சியில் இந்த ஆட்சி 6 மாதம் நீடிக்குமா என்ற சந்தேகம் என பேசினேன்.
* ஆனால் நான் உறுதியாக சொல்கிறேன், தி.மு.க. எதிர்க்கட்சியாக தொடர்ந்து செயல்படும்.
* திமுக மீண்டும் ஆளும் கட்சியாக மாற சுறுசுறுப்பாக பணியாற்ற வேண்டும்.
* இப்போது நடப்பது என்ன? த.வெ.க.வினரிடம் இருந்து மக்களை காக்க வேண்டிய நிலை உள்ளது.
* அடுத்து எப்போது தேர்தல் வந்தாலும் இந்த ஆட்சியை மக்கள் அகற்றுவார்கள்.
* த.வெ.க. ஆட்சியில் ஆளுங்கட்சியை சேர்ந்த பெண்ணுக்கே பாலியல் வன்கொடுமை நிகழ்ந்துள்ளது.
* த.வெ.க. ஆட்சியில் மகளிருக்கு எதிரான குற்றங்கள் தினம் தினம் நடக்கிறது, மின்வெட்டும் தொடர்கிறது.
* அதிமுக எம்எல்ஏக்களை முதலமைச்சர் ஷாப்பிங் செய்து கொண்டு உள்ளார்.
* முதலமைச்சர் ஒவ்வொரு கூட்டத்திலும் கான்பிடண்டாக இருங்க என்கிறார்.
* அவரது ஆட்சி மீது அவருக்கே நம்பிக்கை இல்லையா? அல்லது அவரது ஆட்சிக்கு ஆதரவு கொடுக்கும் கட்சிகள் மீது முதலமைச்சருக்கு நம்பிக்கை இல்லையா?
* வெற்றி பெற்று ஒரே மாதத்தில் த.வெ.க.விற்கு ஆதரவு கொடுக்கிறார்களே அப்படி என்ன ஆபர் கொடுக்கப்பட்டு உள்ளது?
* கை விரலில் வைத்த மை அழியும் முன்னே, ராஜினாமா செய்து விட்டு வேறு கட்சிக்கு ஆதரவு கொடுக்கிறார்கள்.
* பிற மாநிலங்களில் பாஜக செய்யும் வேலையைதான் தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் செய்து கொண்டிருக்கிறார்.
* நிதி ஆயோக் கூட்டத்தில் தி.மு.க.வின் சாதனைகள், கோரிக்கைகளையே முதலமைச்சர் கூறியுள்ளார்.
* அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தப்பிக்கவே மோடியை சந்தித்தேன் என என்னை விமர்சித்திருந்தார் முதலமைச்சர் விஜய்.
* கரூர் வழக்கிலிருந்து தப்பிக்கத்தான் டெல்லி சென்றீர்களா என முதலமைச்சர் விஜயிடம் நான் கேட்கட்டுமா?
* உங்களைப்போல் கேள்வி கேட்டு உங்களைப்போல் தரம் தாழ்ந்த அரசியல் செய்ய நான் விரும்பவில்லை என்றார்.