

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் பேரனும், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினின் மகனுமான இன்பன் உதயநிதி லண்டன் மான்செஸ்டர் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் விளையாட்டு மேம்பாடு தொடர்புடைய பட்டப்படிப்பை படித்து முடித்துள்ளார்.
அவருக்கு பட்டம் வழங்கும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக மு.க.ஸ்டாலின் ஜூலை 4-ம் தேதி லண்டன் புறப்பட்டுச் சென்று அங்கு ஓய்வெடுத்து வருகிறார்.
அவரைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது குடும்பத்துடன் ஜூலை 11-ம் தேதி லண்டன் புறப்பட்டுச் சென்றார். அவருடன் 10 குடும்ப உறுப்பினர்களும் சென்றுள்ளனர்.
இந்நிலையில், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மகன் இன்பநிதி லண்டன் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.
அதை நேரில் காண சென்றிருந்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேரனை வாஞ்சையுடன் கட்டித் தழுவி வாழ்த்தினார். பாட்டி துர்கா ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் கலந்துகொண்டு தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.