

மகாராஷ்டிரா மாநிலத்தில் பாலில் டிடர்ஜென்ட், பாமாயில் கலந்து தயாரிக்கப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு தயாரிக்கப்பட்ட 2.3 கோடி லிட்டர் பால் மாநிலம் முழுவதும் வினியேகம் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தை சுட்டிக்காட்டி தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ்தள பதிவில் கூறி இருப்பதாவது:-
விளம்பரத்துக்கு ‘விஸ்வகுரு’ நிர்வாகத்தில் ‘பூஜ்யகுரு’. இதுதான் பா.ஜனதாவின் லட்சணம். மக்களின் ஆரோக்கியத்தை விட ஊழலே பிரதானம். நாட்டின் எதிர்காலமான குழந்தைகளின் உணவில் கூட விஷம் கலக்கும் அளவிற்கு பா.ஜனதாவின் ஊழல் ஆட்சி மலிந்துவிட்டது. இதற்கெல்லாம் எப்போது விடிவு காலம்?
மத்திய விசாரணை அமைப்புகளான அமலாக்கத்துறை, சி.பி.ஐ. வருமான வரித்துறை ஆகிய விசாரணை முகமைகள் இப்போது எங்கே சென்றன?
மத்திய அரசே செவி சாய். மக்களின் உயிரோடு விளையாடுவதை உடனே நிறுத்து.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.