

சென்னையில் தேமுதிக தலைமையகத்தில் இன்று அக்கட்சி நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்,
“2026 தேர்தலுக்கு முன்புவரை அதிமுக கூட்டணியில் இருந்தோம். 2024 தேர்தலின்போது அனைத்து கட்சிகளும் அதிமுகவை விட்டு ஓடியது. ஆனால் தேமுதிக கூட்டணி தர்மத்தை மதித்து அதிமுகவுடன் அன்று நின்றது. ஆனால் 2026 தேர்தலுக்கு, ஓடியவர்களை எல்லாம் அழைத்து இபிஎஸ் பேசினார். அவர்களுக்கு சீட்டு கொடுக்கிறார். ஆனால் உடன் நின்ற தேமுதிகவிற்கு மரியாதை இல்லை.
ஒரு ஆலோசனை கூட்டத்திற்குகூட தேமுதிகவை அழைக்கவில்லை. ஆயிரம்முறை நாங்கள் கூறினோம், கூட்டணியை மக்களிடம் சேர்க்கவேண்டுமானால் ஆர்ப்பாட்டம், பேரணி இணைந்து நடத்தவேண்டும் என்று.
உங்களைப் போல நானும் ஒரு பொதுச்செயலாளர், நீங்கள் அழைக்காமலேயே நான் உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டேன். அதற்கு காரணம் கூட்டணி தர்மம். எம்பி சீட்டுக்காக நாங்கள் அதிமுக கூட்டணியை விட்டுவந்தோம் என எல்லாம் கூறுகிறார்கள். எங்கள் தன்மானத்திற்காகவே கூட்டணியை விட்டு வந்தோம். இதுபோல பல எம்பி சீட்டுகளை நாங்கள் நினைத்தால் பெறுவோம்.
தொடர்ந்து தேர்தல் பிரசாரங்களில் தேமுதிகவை மட்டும் விமர்சித்து பேசினார். அப்போதுதான் எம்.பி.சீட்டுக்காக அதிமுக அளித்த, இபிஎஸ் கையெழுத்திட்ட கடிதத்தை காட்டினேன். அதிமுகவில் இபிஎஸ்-ஐ தவிர அனைவரும் தேமுதிக கூட்டணியில் இருக்கவேண்டும் என நினைத்தனர். ஆனால் அவர் குறைத்து மதிப்பிட்டார். ஆனால் இன்று எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்து, அதிமுக ஐசியுவிற்கு சென்றுள்ளது.” என தெரிவித்தார்.