முதலமைச்சர் விஜய்யின் குட்டிக்கதையை சிரித்தபடி கேட்டு ரசித்த எடப்பாடி பழனிசாமி

தி.மு.க. மீதான விஜய்யின் அட்டாக் அ.தி.மு.க.வினரும் ரசிக்கும் வகையில் இருந்ததாக கருத்துக்கள் பரவலாகி வருகிறது.
எடப்பாடி பழனிசாமி- முதலமைச்சர் விஜய்
Published on

முதலமைச்சர் விஜய் சட்டசபையில் சொன்ன குட்டிக் கதையை கேட்டு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உற்சாகமாக சிரித்த வீடியோ டிரெண்டாகி உள்ளது.

முதலமைச்சர் விஜய் பேசுகையில் குட்டிக் கதையில், உங்க அப்பாவை காணோம் என்று சொன்ன போது, எதிரில் அமர்ந்திருந்த எடப்பாடி பழனிசாமி ஜாலியாக சிரித்து கொண்டிருந்தார்.

இந்த வீடியோ சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது. விஜய் நேரடியாக தி.மு.க.வை அட்டாக் செய்ததும், ஸ்டாலினை நக்கல் செய்ததோடு, உதயநிதி ஸ்டாலினுக்கும் பதில் அளித்தது எடப்பாடி பழனிசாமிக்கும் உற்சாகத்தை கொடுத்துள்ளதாக பார்க்கப்படுகிறது. இதன் மூலமாக தி.மு.க. மீதான விஜய்யின் அட்டாக் அ.தி.மு.க.வினரும் ரசிக்கும் வகையில் இருந்ததாக கருத்துக்கள் பரவலாகி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com