தே.மு.தி.க இல்லாமல் அ.தி.மு.க ஆட்சியே வந்து இருக்காது- எல்.கே.சுதீஷ்

எடப்பாடி பழனிசாமி விமர்சனத்திற்கு தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஸ் பதிலடி கொடுத்துள்ளார்.
தே.மு.தி.க இல்லாமல் அ.தி.மு.க ஆட்சியே வந்து இருக்காது- எல்.கே.சுதீஷ்
Published on

2026 சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரையை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கினார்.

மயிலாப்பூர் தொகுதி கூட்டணிக் கட்சியான பாஜகவுக்கு அதிமுக ஒதுக்கியுள்ளது.

ஆனால், மயிலாப்பூர் தொகுதி வேட்பாளரை பாஜக இன்னும் அறிவிக்காத நிலையில் இபிஎஸ் தமிழிசை சவுந்தரராஜனுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது, திமுக கூட்டணியில் அங்கீகாரம் இல்லாத கட்சி அதிக தொகுதிகளை வாங்கியதாக அதிமுக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி விமர்சனத்திற்கு தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஸ் பதிலடி கொடுத்துள்ளார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில்,“2011-ல் தேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சியே வந்து இருக்காது.

இன்றைக்கு பேசுகின்ற இபிஎஸ் அப்போது எங்கு இருந்தார் என்பது அவருக்கும் தெரியும் எங்களுக்கும் தெரியும்.

திமுக தொகுதிப் பங்கீட்டு குழுவுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறோம்.

70% நாங்கள் கேட்ட தொகுதி கொடுத்திருக்கிறார்கள்; மீண்டும் நாளை காலை பேச்சுவார்த்தை தொடங்கும்" என்றார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com