TN Assembly Election: 8வது முறையாக போட்டி..! ராயபுரத்தில் ஜெயக்குமார் வேட்புமனு தாக்கல்

1991ல் இருந்து தொடர்ந்து ராயபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
TN Assembly Election: 8வது முறையாக போட்டி..! ராயபுரத்தில் ஜெயக்குமார் வேட்புமனு தாக்கல்
Published on

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற ஏப்ரல் 23-ந்தேதி நடக்கிறது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 30-ந்தேதி தொடங்கியது.

வருகிற 6-ந்தேதி வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாளாகும். அன்று மதியம் 3 மணி வரை வேட்பு மனுக்கள் பெறப்படுகிறது.

இதற்காக மாநிலம் முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம் உருவாக்கப்பட்டு உள்ளது. அந்த அலுவலகங்களில் இன்று காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்பு மனுக்கள் பெறப்படுகிறது.

இந்நிலையில், சென்னை ராயபுரம் தொகுதியில் போட்டியிட 8வது முறையாக இன்று வேட்புமனுவை அதிமுக வேட்பாளர் டி.ஜெயக்குமார் தாக்கல் செய்தார்.

1991ல் இருந்து தொடர்ந்து இத்தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com