வைகோவின் புத்தக வெளியீட்டு விழா: ஆகஸ்ட் 4-ல் முதலமைச்சர் விஜய் டெல்லி பயணம்!

புத்தகத்தை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி வெளியிட இருக்கிறார். இந்த விழாவில் பங்கேற்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் விஜய்க்கு, வைகோ கோரிக்கை விடுத்திருந்தார்.
முதலமைச்சர் விஜய்
Published on

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் கோரிக்கையை ஏற்று புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் விஜய் ஆகஸ்ட் மாதம் 4-ந்தேதி டெல்லிக்கு செல்ல உள்ளார்.

புத்தக வெளியீட்டு விழா

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது, அவர் நாடாளுமன்றத்தில் தான் பேசிய உரையை புத்தகமாக தயாரித்துள்ளார். இந்த புத்தக வெளியிட்டு விழா டெல்லியில் வரும் ஆகஸ்ட் 4-ந்தேதி நடக்க இருக்கிறது.

ராகுல் காந்தி

இந்த புத்தகத்தை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி வெளியிட இருக்கிறார். இந்த விழாவில் பங்கேற்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் விஜய்க்கு, வைகோ கோரிக்கை விடுத்திருந்தார். இதனை ஏற்று ஆகஸ்ட் 4-ந்தேதி முதலமைச்சர் விஜய் டெல்லி செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

டெல்லி அரசியல்

இந்த நிகழ்வில், பல முக்கிய தலைவர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள். இந்த புத்தக வெளியீடு மூலம் டெல்லி அரசியலில் முதலமைச்சர் விஜய் தடம் பதிக்க இருக்கிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com