

தமிழ்நாடு சட்டசபையில் விரைவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருப்பதையொட்டி தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தினமும் அரசு துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இதை தொடர்ந்து இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் தொழில்துறை சார்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் புதிய தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் எங்கெங்கு தொழில் தொடங்க உள்ளன என்பது குறித்து விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
முதலீடுகளை ஈர்ப்பது, வேலை வாய்ப்புகளை அதிகரிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்த கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் விரிவான ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா மற்றும் தொழில்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
குறிப்பாக இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை அதிகரிப்பது பற்றியும் முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.
பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டிய புதிய தொழில் திட்டங்கள், அறிவிப்புகள் பற்றியும் முதலமைச்சர் விஜய் ஆலோசனை மேற்கொண்டார்.