

தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற பிறகு தனது முதல் பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதையொட்டி தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்களும், ரசிகர்களும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர்.
முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக, பொதுமக்கள் இலவசமாக வண்டலூர் உயிரியல் பூங்காவைப் பார்வையிடலாம் போன்ற பல சிறப்பு அறிவிப்புகளும் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு பிரதமர் மோடி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
முதலமைச்சர் விஜய் நீண்ட ஆயுளுடனும் நல்ல ஆரோக்கியத்துடனும் வாழ இறைவனை வேண்டுகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.
முதலமைச்சர் விஜய் மகிழ்ச்சியோடும், உடல் - உள நலத்தோடும் பொது வாழ்வில் பணியாற்றிட விழைகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.