குஜராத்தையும் மகாராஷ்டிராவையும் பின்னுக்குத் தள்ளி தமிழ்நாடு முதலிடம் - மு.க.ஸ்டாலின் பெருமிதம்| Tamil Nadu

திராவிட மாடல் அரசின் திட்டமிட்ட நடவடிக்கைகளினால் அடுத்த நான்காண்டுகளில் 7,997.17 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
குஜராத்தையும் மகாராஷ்டிராவையும் பின்னுக்குத் தள்ளி தமிழ்நாடு முதலிடம் - மு.க.ஸ்டாலின் பெருமிதம்| Tamil Nadu
Published on

சென்னை:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் ஆங்கில நாளிதழின் செய்தியினை பகிர்ந்து பதிவிட்டுள்ளதாவது:-

ஜவுளி ஏற்றுமதி: திராவிட மாடலின் 4 ஆண்டுகளில் 29% வளர்ச்சி!

குஜராத்தையும் மகாராஷ்டிராவையும் பின்னுக்குத் தள்ளித் தமிழ்நாடு முதலிடம்!

2020-2021-இல் 6,193.39 மில்லியன் டாலராக இருந்த தமிழ்நாட்டின் ஏற்றுமதி அளவு, திராவிட மாடல் அரசின் திட்டமிட்ட நடவடிக்கைகளினால் அடுத்த நான்காண்டுகளில் 7,997.17 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் தமிழ்நாடு மட்டுமே 21.84%!

இவை அனைத்தையும் சொல்வது நாமல்ல, ஒன்றிய அரசு!

சாதனைகளைச் சொல்லி #வெல்வோம்_ஒன்றாக! என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com