Cylinder Shortage| மத்திய பா.ஜ.க. அரசால் தான் பொதுமக்களுக்கு தொல்லை- மு.க.ஸ்டாலின்

Cylinder Shortage| மத்திய பா.ஜ.க. அரசால் தான் பொதுமக்களுக்கு தொல்லை- மு.க.ஸ்டாலின்
Published on
Summary

மத்திய அரசு உடனடியாக நிலைமையைச் சீர்செய்திட முன்வர வேண்டும்.

சென்னை:

LPG சிலிண்டர் தட்டுப்பாட்டை குறிப்பிட்டு மத்திய அரசைக் கண்டித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று கண்டனம் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட், தேமுதிக, மதிமுக உள்ளிட்ட தி.மு.க. கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற கண்டன போராட்டத்தை மேற்கொள்காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

வெளியுறவுக் கொள்கையிலும் #FailureModel எனப் பெயரெடுத்துள்ள மத்திய பா.ஜ.க. அரசின் தவறான முடிவுகளால் கடுமையான சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

தொலைநோக்கு இல்லை, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் இல்லை. பொதுமக்களுக்குத்தான் இவர்களால் தொல்லை.

இதனைக் கண்டித்து, தமிழ்நாடெங்கும் நமது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர் மாபெரும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளனர். களத்தில் தகிக்கும் மக்களின் கோபத்தை உணர்ந்து, மத்திய அரசு உடனடியாக நிலைமையைச் சீர்செய்திட முன்வர வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com