விஜய் குறித்த கேள்விக்கு ரஜினி பாணியில் பதில் சொன்ன முதலமைச்சர்

தோல்வியின் விரக்தியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளார்.
விஜய் குறித்த கேள்விக்கு ரஜினி பாணியில் பதில் சொன்ன முதலமைச்சர்
Published on

தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தேர்தல் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பரமக்குடி தி.மு.க. வேட்பாளர் கதிரவனுக்கு ஆதரவாக சாலையில் நடந்து சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது சாலையின் இருபுறமும் திரண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், வாக்கு சேகரிப்பதற்காக நான் நடக்கவில்லை. எப்போதும் காலையில் நடைபயிற்சி மேற்கொள்வேன். தோல்வியின் விரக்தியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளதால் அவதூறாக பேசி வருகிறார் என்றார்.

மேலும் அவரிடம், ‘ஜன நாயகன்’ படம் இணையத்தில் கசிந்தது தொடர்பான கேள்விக்கு, ஜனநாயகன் விவகாரம் பற்றி நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று கூறினார்.

தி.மு.க.வுக்கும், த.வெ.க.வுக்கும் இடையே தான் போட்டி என விஜய் கூறுவது குறித்த கேள்விக்கு, No Comments என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com