பிரிந்து சென்ற அனைவரும் ஒன்றிணைந்தால் அதிமுக வெற்றி பெரும்- ஜெகன் மூர்த்தி

தமிழகத்தில் திமுகவுக்கு மாற்றாக பலம் வாய்ந்த கட்சியாக அதிமுக உள்ளது.அனைவரும் ஒன்றிணைந்தால், எதிர்வரும் தேர்தலில் அதிமுக ஆட்சியை பிடிக்கலாம்.
பிரிந்து சென்ற அனைவரும் ஒன்றிணைந்தால் அதிமுக வெற்றி பெரும்- ஜெகன் மூர்த்தி
Published on

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற அனைவரும் ஒன்றிணைந்தால், எதிர்வரும் தேர்தலில் அதிமுக ஆட்சியை பிடிக்கலாம் என கே.வி.குப்பம் எம்எல்ஏ ஜெகன் மூர்த்தி கருத்து தெரிவித்துள்ளார்.

அதிமுக கூட்டணியில் உள்ள ஜெகன் மூர்த்தி, கடந்த சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்நிலையில், அதிமுக குறித்து மேலும் அவர் கூறுகையில், " தமிழகத்தில் திமுகவுக்கு மாற்றாக பலம் வாய்ந்த கட்சியாக அதிமுக உள்ளது.

தொண்டர்களின் கோரிக்கையை ஏற்று கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க பரிசீலனை செய்ய வேண்டும்.

அவ்வாறு செய்தால், எதிர்வரும் தேர்தலில் அதிமுக ஆட்சியை பிடிக்கலாம்" என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com